புதுடில்லி,நவ.29- பாஜக ஆளும் மாநிலங்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கிக்கொண்டுள்ளன. கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரளாவிடமிருந்து மோடி பாடம் கற்பாரா? என்று சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ள தாவது: ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது என பிரதமர் அறிவித்த பிறகு, அந்த சட்டங்களை ஏன் திரும்பப் பெறுகிறோம் என்று அதற்கான நோக்கங்களையும் காரணங்களையும் பட்டியலிட்டு ஓர் அறிக்கை வெளியிட்டார். ஆனால் உண் மையான காரணங்களைச் சொல்வதற்குப் பதிலாக அவற்றை நியாயப்படுத்தும் விதத்திலேயே, பிரதமரைப் போலவே கூறியிருந்தார். ஒரு சிறு குழுவினர் மட்டும்தான் அந்த சட்டங்களை எதிர்ப்பதாக அவர் கூறியிருந்தார். அவரது வாதங்களை நமது அன்ன தாதாக்கள் முற்றாக நிராகரித்து விட்டார்கள். அடுத்து வரப்போகும் 5 மாநிலத் தேர்தல்களுக்குப் பிறகு மீண்டும் இதே சட்டங்களை இவர்கள் கொண்டு வருவார்கள் என்பதற்கு தோமரின் அறிக்கையே சாட்சியம்.
ஆனால் உண்மையில் இந்த சட்டங் களை அவர்கள் எப்படி கொண்டுவந் தார்கள் என்பதை நினைத்துப் பார்க் கிறேன். நாடாளுமன்றத்திற்கு தெரியாமல் அராஜகமாக கொண்டுவந்தார்கள். இதை அறிந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த சட்டம் தொடர்பாக வாக் கெடுப்புக்கு விட வேண்டும் என்று முழங்கிய போது அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டார்கள். 750க்கும் அதிகமான விவசாயிகள் தியாகிகள் ஆக்கப்பட் டார்கள். ஒன்றிய அமைச்சரின் மகனால் மிரட்டப்பட்டு, தாக்கப்பட்டு, கார் ஏற் றப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். இவற்றையெல்லாம் செய்யும் போது அவர்கள் எந்தக் கூச்சமும் படவில்லை. ஆனால் இப்போது பாசாங்குத் தனமாக, நியாயப்படுத்திக் கொண்டே திரும்பப் பெறுகிறார்கள்.
25 சதவீதம் இந்தியர்கள் கொடிய வறுமையின் பிடியில் இருக்கிறார்கள் என்று நிட்டி ஆயோக் அறிக்கை தெரிவிக் கிறது. பல வகையான வறுமை நிலை குறித்த பட்டியலில், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகியவை வறுமையின் கோரப்பிடியில் சிக்கியிருப்பது அப்பட் டமாகத் தெரிகிறது. 51சதவீதம் வறுமையில் பீகாரும், 31 சதவீத வறுமையில் உத்தரப் பிரதேசமும், 36 சதவீத வறுமையில் மத்திய பிரதேசமும் உள்ளன. அகில இந்திய சராசரி கூட 27.9 சதவீதம் ஆகும். ஆனால் கேரளா மட்டும் ஒளிர்கிறது. வெறும் ஒரு சதவீதத்திற்கும் குறைவான மக்களே வறு மைப் பட்டியலில் உள்ளனர். எங்களிட மிருந்து பாடம் கற்றுக் கொள்வீரா மோடி அவர்களே?
இவ்வாறு யெச்சூரி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment