கரோனா மரணங்களின் உண்மையான எண்ணிக்கையை வெளியிடுங்கள் : ராகுல்காந்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 29, 2021

கரோனா மரணங்களின் உண்மையான எண்ணிக்கையை வெளியிடுங்கள் : ராகுல்காந்தி

புதுடில்லி. நவ 29 இந்தியாவில் கரோனா மரணங்களின் உண் மை யான எண்ணிக் கையை வெளியிட வேண்டும் என்று மேனாள் காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி ஒன்றிய அரசுக் குக் கோரிக்கை  விடுத் துள்ளார்.

கரோனா  மரணங்கள் குறித்த அரசாங்கத்தின் புள்ளி விவரங்கள் தவறானவை என்றும், ஒவ்வொருவருக்கும் ஒன்றிய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மேனாள் காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில்,  கரோனா தொற்றுக்கு  தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களின் கதைகள் உண்மை, அவர்களின் வலி மற்றும் துன்பங்கள் உண்மை. அரசாங்க புள்ளிவிவரங்கள் பொய். அரசாங்கம் உண்மை யான புள்ளிவிவரங்களை வெளியிட்டு இழப்பீடு வழங்க வேண்டும். என்று குறிப்பிட்டுள் ளார்.

கரோனா தொடர்பான மரணங்கள் குறித்து அரசாங் கத்தின் மீதான தனது தாக் குதலைத் தொடர்ந்த ராகுல், குஜராத்திலிருந்து பாதிக்கப் பட்டவர்களின் குடும்பங் களைப் பற்றிய காணொலியை யும் சுட்டுரைப் பதிவில் வெளியிட்டுள்ளார்.  இந்த  காணொ லியில், தொற்றுநோய் காலத் தில் குடும்பத்தினர் தங்கள் அனுபவத்தை விவரித்தனர்.

கரோனா தொற்றுநோயின் போது, ​​குஜராத்தின் வளர்ச்சி மாதிரியின் உண்மை அம்பல மானது என்று ராகுல் கூறி னார். அவர் பல செய்திகளைப் பகிர்ந்து கொண்டுகுஜராத் தின் வளர்ச்சி மாதிரிஎன்று கேலி செய்தார்.

குஜராத் மாதிரி பற்றி நிறைய விவாதங்கள் உள்ளன. நாங்கள் பேசிய அனைத்து குடும்பங் களும் கரோனா  தொற்றுநோய் களின் போது, ​​படுக்கைகள் அல்லது ஆக்ஸிஜன் அல்லது வென்டி லேட்டர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லைஎன்று மேனாள் காங்கிரஸ் தலைவர் மேலும் கூறினார். குஜராத்தில் மட்டும் கரோனா காரணமாக சுமார் மூன்று லட்சம் பேர் இறந்துள்ளனர் என்று அவர் குற்றம் சாட்டி னார்.  ஆனால் தொற்றுநோ யால் 10,000 பேர் மட்டுமே இறந்துள் ளனர் என்று மாநில அரசு கூறியது.

குடிமக்கள் அரசாங்கத் திற்கு வரி செலுத்துவதால், எங் கள் குடிமக்களைப் பாதுகாப் பது அரசாங்கத்தின் பொறுப்பு. கரோனா  காரணமாக ஒரு நபர் யாரையாவது இழந்திருந் தால், உண்மை வெளிவர வேண்டும், இந்த மக்களுக்கு போதுமான இழப்பீடு கிடைக்க வேண்டும்," என்று அவர் கூறி னார்.

இந்த கடினமான காலங் களில், நாங்கள் உங்கள் பக் கத்தில் நிற்க விரும்புகிறோம், நாங்கள் அனைவரும் உங்க ளுடன் இருக்கிறோம், கவ லைப்படத் தேவையில்லை என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம்.

இந்தியாவில், தாய், தந்தை, சகோதரர் மற்றும் சகோதரியை இழந்த லட்சக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. ஆனால் ஒன்றை நினைவில் கொள் ளுங்கள், இந்த குடும்பங்களுக்கு நான்கு லட்சம் ரூபாய் இழப் பீடு வழங்கக் காங்கிரஸ் கட்சி என்ன வேண்டுமானாலும் செய்யும்," என்று அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment