பாலியல் வழக்கு சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 29, 2021

பாலியல் வழக்கு சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை

பாட்னா, நவ.29- பீகார் மாநி லம் அராரியா மாவட்ட கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் கடந்த அக்டோபர் 8ஆம் தேதி ஒரு சிறுமியை பாலியல் வன்முறை செய்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக நாளந்தா சிறார் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ் வழக்கு கடந்த 26.11.2021 அன்று நீதிபதி மன்வேந் திர மிஸ்ரா முன்பு விசா ரணைக்கு வந்தது. சிறு வன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவ னுக்கு நீதிபதி 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து அன்றே தீர்ப்பு வழங்கினார்.

குற்றவாளி சிறுவன் என்பதால் சிறார் சீர்திருத் தப் பள்ளிக்கு சிறுவனை அனுப்ப நீதிபதி உத்தர விட்டார். ஒரே நாளில் வழக்கு விசாரணை முடித்து தீர்ப்பளிக்கப்பட்டதன் மூலம் புதிய முன்மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 2018ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்திலும் டால்டியா நீதிமன்றம் பாலியல் குற்ற வாளி மீதான வழக்கில் 3 நாட்களில் விசாரணையை முடித்து தண்டனை வழங் கியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment