சென்னை, நவ.2 இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டின் புதிய ஆளுந ராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவி பல்கலைக் கழக துணை வேந் தர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். வேந்தர், துணை வேந்தர்களை அழைத்துப் பேசுவது வழக்கமான ஒன்று, எனினும் தமிழ்நாடு ஒருமுகமாக நின்று, எதிர்ப்புத் தெரிவிக்கும் தேசியக் கல்விக் கொள்கையை படிப்படியாக அமல்படுத்த வேண் டும் என அறிவுறுத்தி யிருப்பது எதிர்மறை போக்காகும். இது மக்கள் தேர்ந்தெடுத்த அரசின் கொள்கை வகுக்கும் செயல் பாட்டில் குறுக்கிடுவதாகும்.
தமிழ்நாட்டின் தனித்துவத்தை கருத்தில் கொண்டு, கல்விக் கொள்கை உருவாக்கப் படும் என முதலமைச்சர் மக்களுக்கு உறுதி யளித்துள்ள நிலையில், மக்கள் உணர்வுக்கு எதிராக ஆளுநர் தேசியக் கல்விக் கொள்கையை குறுக்கு வழியில் அமல்படுத்த முயற்சிப்பது அமைதியை பாதிக் கும் செயலாகும். ஆளுநர் மாளி கைக்கு மாநில அரசு டன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் எண் ணம் இருந்தால் அது உடனடியாக கைவிடப்பட வேண்டும் என வலியுறுத்து கிறோம். தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறையுடன் இசைவாக செல்லும் இணக்க மான வழிமுறையை ஆளுநர் பின்பற்ற வேண்டும்.
No comments:
Post a Comment