புதிய ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக தடுப்பூசி செயல்படுமா?: மருந்து நிறுவனங்கள் கைவிரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 28, 2021

புதிய ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக தடுப்பூசி செயல்படுமா?: மருந்து நிறுவனங்கள் கைவிரிப்பு

கேப்டவுண், நவ.28 தென்ஆப்பிரிக் காவில் கண்டறியப் பட்ட புதிய வகை ஒமைக்ரான் வைரசுக்கு(பி.1.1.529) எதிராக எங்கள் தடுப்பூசி செயல்படுமா என்பதை உறுதி செய்ய இயலாது என்று ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் மருந்து நிறுவனங்கள் கைவிரித்துள்ளன.

ஆனால், ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக அடுத்த 100 நாட்களில் வீரியம் மிகுந்த தடுப்பூசியை தயாரிக்க முடியும் என்று ஸ்புட்னிக் செய்திநிறுவனம் தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில்தான் முதல்முறையாக இந்த ஒமைக்ரான் வகை வரஸ்   உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது.அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.

இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ் களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக இந்த வைரஸ் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். முதன் முதலில் இந்த வைரஸ் தென் ஆப்பிரிக் காவில் கடந்த வாரம் கண்டறியப்பட்டது.

குறிப்பாக போட்ஸ்வானா நாட்டில் இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண் டவர்களுக்கு கூட இந்த புதிய வைரஸ் தாக்கியுள்ளது.இந்த வகை வைரஸ், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டவை, வேகமாகப் பரவும், கரோனாவின் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

இந்நிலையில் தடுப்பூசி நிறுவனங் களான ஃபைசர், பயோஎன்டெக் நிறுவனங்கள் வீரியம் மிகுந்த ஓமைக்ரான் கரோனா வைரசுக்கு எதிராக தங்களின் தடுப்பூசி சிறப்பாகச் செயல்படுமா என உறுதியாகத் தெரியாது எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஃபைசர், பயோஎன்டெக் நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கையில்,  தென் ஆப்பிரிக் காவில் புதிதாகக் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் வகை கரோனா வைரசுக்கு எதிராக எங்கள் தடுப்பூசி செயல்படுமா என உறுதியாகத் தெரிவிக்க இயலாது. ஆனால், அடுத்த 100 நாட்களில் ஓமைக்ரான் வைரசுக்கு எதிராக வீரியம் மிகுந்த தடுப்பூசியை தயாரித்து, ஒப்புதலைப் பெற முடியும். அடுத்த 2 வாரங்களில் ஓமைக்ரான் வைரஸ் குறித்த அதிகமான தகவல்கள், புள்ளிவிவரங்கள் கிடைத்து விடும் என எதிர்பார்க்கிறோம். ஆனால், ஏற் கெனவே பாதிப்பை ஏற்படுத்திவரும் டெல்டா வகை வைரஸ்களில் இருந்து ஓமைக்ரான் வகை வைரஸ் முற்றிலும் மாறுபட்டது. புதிய வகை வைரசுக்கு ஏற்றாற் போல் தங்களின் தடுப்பூசி செயல்படும் வகையில் ஏற்கெனவே ஆய்வுகளைத் தொடங்கி விட்டோம். ஆதலால், 6 வாரங்கள் முதல் 100 நாட்களுக்குள் ஓமைக்ரான் வைர சுக்கு எதிராக தடுப்பூசி தயாராகவிடும் எனத் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment