புதிய வைரசால் உலக சுகாதார அமைப்பு கவலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 28, 2021

புதிய வைரசால் உலக சுகாதார அமைப்பு கவலை

ஜெனீவா, நவ.28 தென் ஆப்பிரிக் காவில் கண்டறியப்பட்ட புதியவகை பி.1.1.529 கரோனா வைரசுக்கு உலக சுகாதார அமைப்பு ஓமைக்ரான் என்று பெயரிட்டுள்ளது. இந்த புகிய வகை வைரஸ் கவலைக்குரியதாக இருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த புதியவகை வைரஸ் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பின் அவசர ஆலோசனை மற்றும்சிறப்புக் கூட்டம்  ஜெனி வாவில் நடந்தது. இந்தக் கூட்டத் துக்குப்பின் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப் பட்டிருப்பதாவது:

 தென் ஆப்பிரிக்காவில் டெல்டா வகை வைரசால்தான் அதிக மானோர் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், தொற்று பாதிப்பு குறைந்திருந்த நிலையில், திடீரென கடந்த சில வாரங்களாக தொற்று அதிகரித்தது. இது தொடர்பாக நடந்த ஆய்வுகள், கடந்த 9ஆம் தேதி எடுக்கப்பட்ட மாதிரிகளில் புதிய வகை கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.

முதல்முறையாகக் கண்டறியப் பட்ட புதிய வகை வைரசுக்கு(பி.1.1.529) ஓமைக்ரான் எனப் பெயரிடப் பட்டுள்ளது. இந்த வைரஸ் மிகுந்த கவலைக்குரியதாக இருக்கிறது. இந்த வைரஸை தொடர்ந்து கண் காணிக்க வேண்டும், அதன் உருமாற்றம், தொடர்புகள், எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதை ஆய்வு செய்யவேண்டும்.முதல்கட்ட ஆய்வில் ஓமைக்ரான் வைரஸ் அதிக மான பரவல் தன்மை கொண்ட தாகவும், அதிகமான உருமாற்றம் அடையும் தன்மை கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் பல்வேறு மண்டலங்களிலும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் சுட்டுரையில் பதிவிட்ட கருத்தில்  புதிய வகை கரோனா வைரசான ஓமைக்ரான், ஏராளமான உருமாற்றங்களைக் கொண்டிருக்கிறது, பெரும் கவலையளிக்கிறது. ஆதலால், நம்மு டைய கரோனா தடுப்பு வழி முறைகளான தடுப்பூசி செலுத்து வதை வேகப்படுத்த வேண்டும், அனைத்து இடங்களையும் நாம் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment