சட்டவிரோத தங்க வேட்டைக்காக அமேசான் நதியில் குவியும் படகுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 29, 2021

சட்டவிரோத தங்க வேட்டைக்காக அமேசான் நதியில் குவியும் படகுகள்

பிரேசிலியா, நவ. 29- சட்டவிரோதமாக செயல்படும் தங்கச் சுரங்கங்களுக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான அகழ்வு படகுகள் அமேசானின் மதேரா நதியில் தங்க வேட்டைக் காக குவிந்துள்ளன.

பிரேசிலின் அமேசான் காடு களில் தங்கச் சுரங்கங்கள் இருப்ப தாக வெளியான செய்தியைத் தொடர்ந்து தங்க வேட்டை செய்ய பலர் முயன்றுள்ளனர். கிளாஸ்கோ பருவநிலை மாற்ற மாநாட்டில் அமேசான் மழைக்காடுகளைப் பாதுகாப்பது குறித்து உறுதியளித் துள்ள நிலையில், நூற்றுக்கணக் கான படகுகள் தங்கத்துக்காக அமேசான் நதிகளில் குவிந்துள்ளன. பம்புகள் பொருத்தப்பட்ட மித வைப் படகுகள் நீண்ட மதேராநதி முழுவதும் ஆக்கிரமித்துள்ளதாக வும், இவை தங்கத்துக்காக ஆற்றுப் படுகைகளைச் சுரண்டி வெற்றிட மாக்கி வருவதாகவும் தகவல் வெளி யாகி உள்ளது. 300-க்கும் மேலான படகுகள் இரண்டு வாரங்களாக நதியில் மிதந்து கொண்டிருக்கின் றன. ஆனால் அரசு எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை என்று பிரேசிலின் கிரீன்பீஸ் செயற்பாட்டாளர் டேனிக்லி அகுயர் கூறியுள்ளார்

மேலும் வலதுசாரி அதிபர் ஜெய்ர் போல்சனோரா 2019-ல் பொறுப்பேற்றதிலிருந்து சுற்றுச் சூழல் ஒழுங்குமுறை அமைப்பு மிகவும் வலுவிழந்துள்ளதாகவும், சட்டவிரோதமாக அமேசான் காடுகளில் ஆக்கிரமிப்பு செய்துள் ளவர்களையும் தங்கச் சுரங்க நட வடிக்கைகளையும் கண்டுகொள் ளாமல் இருப்பதாகவும் குற்றச் சாட்டு உள்ளது. மதேரா நதி சுமார் 3,300 கி.மீ. தொலைவு உள்ளது. இந்த நதியில் தொடர்ந்து சட்ட விரோத அகழ்வு படகுகளின் நட மாட்டம் அதிகரித்து வருகிறது. ஆனால், சட்டவிரோத தங்க வேட் டையைத் தடுக்க இதுவரை நட வடிக்கை எடுக்கவில்லை.

No comments:

Post a Comment