நுகர்பொருள்கள் தயாரிப்பு நிறுவன பங்குகள் வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 29, 2021

நுகர்பொருள்கள் தயாரிப்பு நிறுவன பங்குகள் வெளியீடு

புதுடில்லி, நவ. 29- சுரங்கத் தொழிலுக்கு தேவைப் படும் நுகர்பொருட்கள் தயாரித்து வழங்கி வரும் நிறுவனமானடேகா இண்டஸ்ட்ரீஸ்டிசம்பர் முதல் தேதியன்று அய். பி.., எனும் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்நிறுவன பங்கு வெளியீடு, டிசம்பர் முதல் தேதியன்று துவங்கி, 3ஆம் தேதியுடன் முடி வடைய உள்ளது.இந்த பங்கு வெளியீட்டின் போது, முழுக்க முழுக்க நிறுவனர் கள் மற்றும் பங்குதாரர் களின் 1.37 கோடி பங்கு கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன.

புதிய பங்குகள் எது வும் விற்பனைக்கு விடுக் கப்படவில்லை.தற் போது, இந்நிறுவனத்தின் பங்குகளில் 85.17 சதவீதம் நிறுவனர்கள் வசமும்; 14.54 சதவீதம் பங்கு தார ரான வாக்னர் நிறுவனத் தின் வசமும் உள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட் டுக்கான பணிகளை, ‘ஆக் சிஸ் கேப்பிட்டல்மற்றும்ஜே.எம்., பைனான்ஷியல்ஆகிய நிறுவனங்கள் நிர் வகித்து வருகின்றன.

இந்நிறுவன பங்குகள், மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை ஆகியவற்றில் பட் டியலிடப்பட உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிறுவன பங்குகள் விலை எவ்வளவு என்பது குறித்து, விரைவில் அறி விக்கப்படும் என கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment