வாசிங்டன், நவ. 29- -''மும்பை தாக்குதல் வழக்கை விரைந்து முடித்து குற்ற வாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்,'' என, அமெரிக்க வெளி யுறவுத் துறை அமைச்சர் அன் டோனி பிளின்கன் வலியுறுத்தி யுள்ளார்.
மஹாராட்டிரா மாநிலம் மும்பையில் 2008 நவம்பர் 26இல் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். இந்த சோக நிகழ்வின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் அமெரிக்காவில் கடைப்பிடிக் கப்பட்டது. இதையொட்டி அமெ ரிக்க வெளியுறவு துறை அமைச்சர் அன்டோனி பிளின்கன் கூறியதா வது: மும்பை தாக்குதல் நடந்து 13 ஆண்டுகள் ஆகி விட்டன.
இந்த தாக்குதலில் அமெரிக்கர் கள் ஆறு பேர் உட்பட 166 பேர் பலியானதையும், இந்த சோகத்தில் இருந்து மீண்டெழுந்த மும்பை மக்களையும் இந்நாளில் நினைவுப் படுத்துகிறோம்.நீண்ட காலம் ஆகி யும் மும்பைத் தாக்குதலுக்கு கார ணமானோர் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் உள்ளனர். விரைவில் இந்த வழக்கு விசார ணையை முடித்து குற்றவாளிக ளுக்கு தண்டனை வழங்க வேண் டும். இவ்வாறு அவர் கூறினார்.
மும்பை தாக்குதலின் நினைவு நாள், வாசிங்டன் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் அனுசரிக்கப் பட்டது.இதில் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வென்டி ஷெர் மன், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் துறை துணைச் செயலர் ஜெனிபர் லார்சன் மற்றும் தூதரக அதிகாரிகள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment