எலான் மஸ்க் நிறுவனத்துக்கு தடை பொதுமக்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 29, 2021

எலான் மஸ்க் நிறுவனத்துக்கு தடை பொதுமக்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை

புதுடில்லி, நவ. 29- இந்தியாவில், செயற் கைக்கோள் அடிப்படையிலானபிராட்பேண்டுஇணைய சேவை களை வழங்க, எலான் மஸ்க் தலை மையிலானஸ்டார்லிங்க்நிறுவ னத்துக்கு உரிமம் வழங்கப்பட வில்லை என, தொலைத் தொடர்பு துறை தெரிவித்துள்ளது.

மேலும், இந்நிறுவனத்தால் விளம்பரப்படுத்தப்படும் சேவை களை பெறுவதற்கு, பொதுமக்கள் முன்பதிவு செய்ய வேண்டாம் என் றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.உலகின் மிகப் பெரிய பணக்கார ரான எலான் மஸ்க் தலைமையில் நடைபெற்று வரும் ஸ்டார்லிங்க் நிறுவனம், அதிவேகமான பிராட் பேண்டு சேவையை, செயற்கைக் கோள் வாயிலாக வழங்கி வருகிறது.

இந்தியாவிலும் இத்தகைய சேவையை வழங்க இருப்பதாக கூறி, அதற்காக முன்பதிவு செய்து கொள்ளுமாறு விளம்பரம் செய்து வருகிறது.இதையடுத்து, இந்த சேவையை பெறுவதற்காக 5 ஆயிரம் பேருக்கும் மேல் முன்பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில், இத்தகைய பிராட்பேண்டு சேவையை இந்தியாவில் வழங்க, ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்படவில்லை என, தொலைத் தொடர்பு துறை தெரிவித்துள்ளது.

அத்துடன், ஒழுங்குமுறை விதி களின் படி இயங்குமாறு, ஸ்டார் லிங்க் நிறுவனத்தை, இத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. கூடவே முன்பதிவுகளை உடனடியாக நிறுத்துமாறும், உரிய அனுமதி களை பெற்ற பின், சேவைகளை வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஸ்டார்லிங்க் நிறுவனம், இந் தியாவில் அடுத்த ஆண்டு டிசம்பரி லிருந்து, செயற்கைக்கோள் வாயிலாக, பிராட்பேண்டு சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது.

ஆனால் இதுவரை இதற்கான உரிமம் எதையும் இந்நிறுவனம் பெறவில்லை.

No comments:

Post a Comment