வாசிங்டன், நவ. 29 தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வீரிய மிக்க ஒமிக்ரான் ரக கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கரோனாவுக்கு எதிராக தடுப்பூசியின் செயல் திறன் குறைவு என சொல்லப்படு கிறது.
உலக சுகாதார அமைப்பும் இந்த வகை கரோனாவை கவலைக் குரிய திரிபாக வரிசைப்படுத்தியுள் ளது. தென் ஆப்பிரிக்காவை தவிர்த்து ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் கால் பதித்துள்ளது. இதுவரை 60 பேருக்கு இந்த உரு மாறிய வைரஸ் பாதித்து இருக் கிறது.
ஒமிக்ரான் வைரஸ் அச்சத்தால் உலக நாடுகள் பல பயணக் கட்டுப் பாடுகளை விதித்து வருகின்றன. அதேபோன்று இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக் கும் நடவடிக்கையில் இறங்கியுள் ளது.
இதற்கிடையில், தற்போதுள்ள தடுப்பூசிகள் புதியவகை ஒமிக்ரான் ரக கரோனா வைரசில் இருந்து பாதுகாக்குமா? என்பது குறித்து அந்தந்த தடுப்பூசி நிறுவனங்கள் தீவிர ஆராய்ச்சியில் இறங்கியுள் ளன.
இந்நிலையில், தற்போதுள்ள எங்கள் தடுப்பூசியில் இருந்து ஒமிக் ரான் வைரஸ் தப்பிக்குமா? என தெரியவில்லை என்று பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பைசர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒமிக்ரான் வைரஸ் தற்போ துள்ள எங்கள் தடுப்பூசியிலிருந்து தப்பிக்குமா? என எங்களுக்கு இதுவரை தெரியவில்லை. ஆனால், இந்த ஒமிக்ரான் வைரசுக்கு எதி ராக 100 நாட்களில் புதிய கரோனா தடுப்பூசியை தயாரித்து அனுப்பு வோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment