லண்டன், நவ. 29 கரோனா வைரசானது உலகம் முழுவதும் பல்வேறு உருமாற்றங்களை அடைந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. டெல்டா, டெல்டா பிளஸ் என அடுத்தடுத்த வடிவங்களை கொண்டு பரவலான பாதிப்புகளை ஏற்படுத்தி வரு கிறது.
இந்த நிலையில், ஒமிக்ரான் என்ற உருமாற்ற மடைந்த கரோனா வைரசானது பரவத் தொடங்கி யுள்ளது. ஜெர்மனியிலும் முதன்முறையாக இதன் பாதிப்புகள் ஏற்படத் தொடங்கியுள்ளன.
அந்நாட்டின் முனிச் நகரில் 2 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. தென் ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பி வந்த இருவருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இங்கிலாந்து நாட்டி லும் 2 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப் பட்டு உள்ளன.
இந்த நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, தொடக்க நிலையில், புதிய வகை கரோனாவை பற்றி நமக்கு அதிகம் தெரியாது.
எனினும் கூட நம்முடைய விஞ்ஞானிகள் அடுத் தடுத்து அதுபற்றி ஆய்வு செய்து வருகின்றனர். ஒமிக் ரான் மிக விரைவாக பரவி வருகிறது என தெரிய வந்துள்ளது. இரண்டு தடுப்பூசிகளை எடுத்து கொண் டவர்கள் இடையேயும் இந்த வைரசானது பரவ கூடும் என்று தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment