சாலமன் தீவுகளில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும் - அய்.நா. வேண்டுகோள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 29, 2021

சாலமன் தீவுகளில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும் - அய்.நா. வேண்டுகோள்

ஹோனியாரா, நவ. 29- தென் பசிபிக் பெருங்கடலில் நூற்றுக்கணக்கான தீவுகளைக் கொண்ட நாடு சாலமன் தீவுகள். இந்நாட்டின் பிரதமராக கடந்த 2019-ம் ஆண்டு முதல் இருந்து வருபவர் மானசே சோகவரே.

சமீபத்தில் இவர், தைவானுடனான தூதரக உறவை துண் டித்து விட்டு சீனாவுடன் தூதரக உறவை ஏற்படுத் தினார். இதற்கு அந் நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது டன் போராட்டத்தில் குதித்தனர்.

தலைநகர் ஹோனியா ராவில் உள்ள நாடாளு மன்றம் முன் ஆயிரத்துக் கும் மேற்பட்ட மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். காவல்துறையினருக்கும், போராட் டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. அப்போது போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டடத் துக்கும், அதனருகே உள்ள ஒரு காவல் நிலை யத்துக்கும் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, கலவரம் நடந்த பகுதியில் இருந்து உடல் கருகிய நிலையில் 3 உடல்களை காவல்துறையினர் கண்டெடுத்தனர்.

இந்நிலையில், சாலமன் தீவில் ஏற்பட்ட வன்முறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அய்.நா. பொதுச் செயலாளர் அண்டோ னியோ குட்டரெஸ் வேண்டுகோள் விடுத்துள் ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் கூறினார்.

மேலும், சாலமன் தீவில் அமைதி திரும்பும் வகையில் அத்தீவு மக்க ளுக்கு தேவையான உத விகள் செய்யப்படும். தொடர்ந்து அங்குள்ள நிலைமையை கண்கா ணித்து வருகிறோம் என அவர்தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment