உக்ரைனில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு ரஷ்யா சதி அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 29, 2021

உக்ரைனில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு ரஷ்யா சதி அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

உக்ரைன், நவ. 29 ரஷ்யா, உக்ரைன் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனின் கிரீமியா தீப கற்பத்தை ரஷ்யா தன்னு டன் இணைத்து கொண் டது முதல் இருநாடுகள் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்தது. இதை தொடர்ந்து, உக் ரைனின் கிழக்கு பகுதி களை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆக் கிரமித்தனர்.

இவர்கள் ரஷ்ய ராணு வத்தின் உதவியோடு அர சுக்கு எதிராக சண்டை யிட்டு வருவதாக உக் ரைன் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் ரஷ்யா இந்த குற்றச் சாட்டை திட்டவட்ட மாக மறுக்கிறது.

இந்த நிலையில் உக் ரைனில் அடுத்த வாரம் ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு திட்டமிடப் பட்டுள்ள தாகவும், இதில் ரஷ்யர் களின் பங்கு இருப்பதா கவும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி பரபரப்பு குற்றம் சாட்டி யுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்டிசம்பர் 1-ஆம் தேதி நம் நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பு நடக் கும் என்று எனக்கு தகவல் கிடைத்தது. அரசின் எதிர்ப்பாளராக கருதப் படும் தொழில் அதிபர் ரினாட் அக்மெடோவ், உக்ரைனிய அரசுக்கு எதி ரான போருக்கு இழுக்கப் படுகிறார். இது தொடர் பாக அவருக்கும் ரஷ்யா பிரதிநிதிகளுக்கும் இடையே நடந்த உரை யாடலின் ஒலிப்பதிவு என்னிடம் உள்ளதுஎன கூறினார்.

ஆனால் இந்த குற்ற சாட்டை திட்டவட்ட மாக மறுத்துள்ள தொழில் அதிபர் ரினாட் அக்மெ டோவ், அதிபர் ஜெலன்ஸ்கி பொய் பரப்புரை செய்வதாக சாடியுள் ளார். அதே போல் ரஷ் யாவும் இந்த குற்ற சாட்டை மறுத்துள்ளது.

No comments:

Post a Comment