லண்டன், நவ. 29 புதிய வகை கரோனா ஒமிக்ரான், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிற வேளையில், அது பேரழிவை ஏற்படுத்தாது என்று இங்கிலாந்து விஞ்ஞானி பேராசிரியர் காலம் செம்பிள் கூறி உள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், “இது பேரழிவை ஏற்படுத்தாது. எனது சகாக்கள் இந்த வைரஸ் பயங்கரமானது என கூறி உள்ளனர். ஆனால் அவர்கள் நிலைமையை மிகைப் படுத்தி உள்ளதாகவே நான் கருதுகிறேன்” என குறிப் பிட்டார்.
“தடுப்பூசியால் கிடைக்கிற நோய் எதிர்ப்புச்சக்தி, இன் னும் கடுமையான நோயில் இருந்தும் மக்களை பாதுகாக் கும். சளி, தலைவலி ஏற்படலாம். இதற்காக மருத்துவ மனைக்கு, தீவிர சிகிச்சை பிரிவுக்கு வருகிற வாய்ப்பு அல்லது இறக்கிற வாய்ப்பு தடுப்பூசியால் வெகுவாக குறைந்து விட்டது” எனவும் அவர் தெரிவித்தார்.
தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணத்தடை விதித்தது இலங்கை
கொழும்பு, நவ. 29 தென்ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு ஒமிக்ரான் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ஒமிக்ரான் வைரஸ் தற்போது தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் ஆகிய நாடு களுக்கும் பரவி விட்டது.
இந்த வைரஸ் இதற்கு முன் கண்டறிப்பட்ட கரோனா வைரஸ் வகைகளை விட ஆபத்து மிக்கது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. எனவே உலக நாடு கள் பலவும் இந்த வைரஸ் தங்கள் நாட்டுகள் நுழைவதை தடுக்கும் வகையில் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ளது.
அந்த வகையில் நமது அண்டை நாடான இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா உள்ளிட்ட 6 தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணத் தடையை அறிவித்துள்ளது. இந்த தடை நேற்று (28.11.2021) முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இது வரை 5 லட்சத்து 61 ஆயிரத்து 59 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதும், 14,258 பேர் அந்த வைர சுக்கு பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment