சந்தா சேர்க்கும் பணியில் அனைவரும் ஈடுபடுவோம்
கழகப் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் உறுதி
ராணிப்பேட்டை, நவ. 29- திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 89ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மண்டல திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம், 27. 11. 2021 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு, ராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை, மாலதி குபேந்திரன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் ராணிப் பேட்டை பெருமாள் வரவேற்று உரையாற்றினார்.
இயக்க பாடகர் இசைக்கலைமாமணி முனைவர் திருத்தணி பன்னீர்செல்வம் இயக்கப் பாடல் களைப் பாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.
கழக மாநில அமைப்பாளர் ஒரத்த நாடு குணசேகரன், "தந்தை பெரியாரின் தத்து வங்களை தாங்கிவரும் விடுதலை ஏட்டை நாடெங்கும் பரப்ப வேண்டும்; அதுவே நம்தலைவருக்கு நாம் தரு கின்ற பிறந்தநாள் பரிசு" என்று தம் தொடக்க உரையில் குறிப்பிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர் டி.ஏ.ஜி. அசோகன், செங்கற்பட்டு மாவட்ட தலைவர் செங்கை பூ. சுந்தரம், செயலாளர் அ. செம்பியன், திருவள்ளூர் மாவட்ட தலைவர் க.ஏ. மோகனவேலு, செயலாளர் கோ. கிருஷ்ணமூர்த்தி, ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் சு. லோக நாதன், வேலூர் மாவட்ட தலைவர் வி.இ. சிவ குமார், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே.சி. எழிலரசன், செயலாளர் வி.ஜி. இளங்கோவன், செய்யாறு மாவட்ட தலைவர் அ. இளங்கோவன், செயலாளர் பொன். சுந்தர், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் சி. மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்ற மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமன், கழக மகளிர் அணியின் மாநில அமைப்பாளர் தேன் மொழி, பெரியார் மருத்துவரணியின் மாநிலச் செயலாளர் மருத்துவர் பழ. ஜெகன்பாபு ஆகியோர் தங்கள் கருத்து களை மிகவும் சிறப்பாக எடுத்துரைத்தனர்.
வேலூர் மண்டல தலைவர் வி. சடகோபன், காஞ்சி மண்டல தலைவர் அரக்கோணம் பு. எல்லப்பன், காஞ்சி மண்டல செயலாளர் முனைவர் காஞ்சி பா. கதிரவன், அரக்கோணம் ஜீவன்தாஸ், மகளிரணி வேலூர் மண்டல செயலாளர் ஈஸ்வரி சடகோபன், காஞ்சிபுரம் செ.ரா முகிலன், குடியாத்தம் அன்பரசன், பெரப்பேரி சங்கர், வேலூர் மாநகர தலைவர் விஸ்வநாதன், காஞ்சி மண்டல இளைஞரணி செயலாளர் இளந்திரையன், வேலூர் மண்டல மாணவர் கழகச் செயலாளர் செய்யாறு வெங்கடேசன் ஆகியோர் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
இறுதியாக, கழகப் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் சிறப்புரையாற்றினார்.
பொதுச்செயலாளர் உரை
அவர்தம் உரையில், தாம் கழகப் பொதுச் செயலாள ராகப் பொறுப்பேற்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சியில் நம் இயக்கக் குடும்பங் களைச் சந்திக்கின்ற இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி என்றும் இதுவும், சமூகநீதிக் காவலர் நம் நினைவில் வாழும் வி.பி. சிங் அவர்களின் நினைவு நாளில் பங் கேற்பது நெகிழ்ச்சியாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
இன்று 'உலக உறுப்புக்கொடை நாள்'. உறுப்புக் கொடையில் தமிழ்நாடுதான் முன்னோடியாக விளங்குகிறது. அதற்கும் நம் இயக்கம்தான் காரணம். நம் இயக்கத்தில் விழிக் கொடை, உடல் கொடையெல்லாம் கொள்கையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் நல்ல ஆட்சி நடைபெறுகிறது. நம் தமிழர் தலைவரின் அறிக்கைகள் உடனடியாக இந்த ஆட்சியில் கவனத்தில் கொண்டு அதற்கு வேண்டிய தீர்வுகளை காண்கின்றனர். இப்படிப்பட்ட இந்த ஆட்சியைப் பாதுகாப்பது நம் இயக்கத்தின் கடமை. நம் நினைவில் வாழும் ஏ.டி.கோபால் அவர்களின் நூற்றாண்டை நம் இயக்கம் சார்பாக சிறப்பாகக் கொண்டாடப்படும் என்று நம் தலைவர் அறிவித்துள்ளார். செய்யாறு பகுதியில் ஏராளமான மாணவர்கள் நம் இயக்கத்தில் இணைந் துள்ளதில் மாவட்டத் தலைவர் இளங்கோவன் அவர் களின் உழைப்பு தெரிகிறது. அருணாசலம் அய்யா அவர்கள் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந் திருப்பார்.
நம் இயக்க எதிரிகளின் பயமே நம்முடைய வெற்றியைப் பறைசாற்றும். விடுதலை என்பது தமிழர் தலைவரின் உயிர்மூச்சு. பெரியார் உலகம் கண்டே தீர வேண்டும் என்பது அவருடைய பெருவிருப்பம்.
இந்த இரண்டு மண்டலங்களில் பெரியாரியல் பயிற்சி முகாம், மகளிர் அணி பயிற்சி முகாம், பகுத்தறிவாளர் கழகத்தின் பயிற்சி முகாம் ஆகியவை சிறப்பாக நடை பெற்றிருக்கிறது. அதேபோன்று விடுதலையை மிக அதிக அளவில் பொது மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். தமிழன் இல்லம் என்பதற்கு அடையாளம் விடுதலையே என்ற குன்றக்குடி அடிகளாரின் கருத்து நினைவுகூரத் தக்கது. ஆசிரியர் பிறந்த நாளில் விடுதலை சந்தாக்களுடன் தமிழர் தலைவரை சந்திக்க இயற்கை ஒத்துழைத்தால் வாருங்கள் என்று அக்கறையுடன் குறிப்பிட்டார்.
பிறந்தநாள் காணும் திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் வி.ஜி.இளங்கோ அவர்களுக்கு கழகப் பொதுச்செயலாளர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
மகளிர் அணித் தோழர்கள் ந. தேன்மொழி, ஈஸ்வரி சடகோபன், கலைமணி லதா ஆகியோர் பொதுச் செயலாளருக்கு சால்வை அணிவித்தனர்.
சந்தா அறிவிப்புகள்:
காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பில் 89 விடுதலை சந்தாக்களை வழங்குவதாக மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் டி.ஏ.ஜி. அசோகன் அறிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தின் சார்பாக 50 விடுதலை சந்தாக்கள் வழங்குவதாக மாவட்ட தலைவர் சு. லோகநாதன் அறிவித்தார். அதற்கான முன்பணமாக 2000 ரூபாய் பணத்தை பொதுச்செயலாளரிடம் வழங் கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் செயலாளர் சி. மூர்த்தி 100 சந்தாக்கள் வழங்குவதாக அறிவித்தார்.
செங்கற்பட்டு மாவட்டத் தலைவர் தனிப்பட்ட முறை யில் தாம் 25 விடுதலை சந்தாக்களை வழங்குவதாகவும், மாவட்டத்தின் சார்பாக கூடுதலான சந்தாக்களை வழங்குவதாகவும் அறிவித்தார்.
தீர்மானங்கள்:
1. பெரியார் பெருந்தொண்டர் வேலூர் மாவட்ட அமைப்பாளர் ச.கி. செல்வநாதன், வேலூர் மாவட்டச் செயலாளர் கு. இளங்கோவனின் இணையர் சகுந்தலா அம்மாள், வேலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் தயாளனின் தந்தை வி.பி. பொன்னையன் ஆகியோரின் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றது.
2. அறிவுலகப் பேராசான் தந்தை பெரியாரின் கொள்கைகளை உலகறியச் செய்திட ஓய்வின்றி உழைத்து வரும் வணக்கத்திற்குரிய தமிழர் தலைவருக்கு 89 ஆவது பிறந்த நாள் வாழ்த்துகளை இக்கலந்து ரையாடல் கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது.
3. தமிழர் தலைவர் அவர்களின் 89ஆவது பிறந்த நாளில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப் புகள் வழங்கி கொண்டாடி மகிழ்வது என இக்கூட்டம் முடிவு செய்கிறது.
4. சுயமரியாதை நாளாம் டிசம்பர் 2ஆம் தேதியன்று தமிழர் தலைவர் அவர்களை, சென்னை பெரியார் திடலில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறி விடுதலை சந்தாக்கள் வழங்குவது என தீர்மானிக்கப்படுகிறது.
5. டிசம்பர் திங்களில் மாவட்டங்கள் தோறும் தமிழர் தலைவரின் பிறந்த நாள் விழாக் கூட்டங்களை நடத்து வது என தீர்மானிக்கப்படுகிறது.
6. தமிழர் தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு செய்யாறு நகரத்தில் சுயமரியாதை நாள் கருத்தரங்கம் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
7. சுயமரியாதைச் சுடரொளி ஏ.டி. கோபால் அவர் களின் நூற்றாண்டு விழாவை திருப்பத்தூரில் நடத்துவ தற்கு வாய்ப்பளித்துள்ள தமிழர் தலைவர் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் அனைவரின் கரவொலி யுடன் நிறைவேற்றப்பட்டன.
கலந்துரையாடல் கூட்டத்தில் மாநில மாணவர் கழக அமைப்பாளர் பொறியாளர் இரா.செந்தூர் பாண்டியன், கி.இளையவேள், ச.வேலாயுதம், வேலூர் வீரமணி, என்.கே. சுப்பிரமணியன், மத்தூர் அண்ணா சரவணன், செய்யாறு காமராஜ், வடமணப்பாக்கம் வெங்கட்ராமன், பாடகர் இராவணன், ஆசிரியர் எழில், ஆசிரியர் வீரமணி, பொன். வெங்கடேசன், திருவள்ளூர் யுவராஜ், செங்கை ரவி, வேலூர் பழனி உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றனர்
மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் எழில். சிற்றரசு நன்றி கூற கலந்துரையாடல் கூட்டம் நிறைவு பெற்றது.
நன்கொடை
இராணிப்பேட்டையில் 27.11.2021 மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற காஞ்சிபுரம் வேலூர் மண்டல கலந்து கொண்ட கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் அவர் களிடம் அளிக்கப்பட்ட நன்கொடை:
1. இராணிப்பேட்டை மாவட்ட தலைவர் லோகநாதன்- 100 ரூபாய்.
2. ஆலம்பாக்கம் பாடகர் இராவணன்-100 ரூபாய்
3. காஞ்சிபுரம் மாவட்டம் பொதுக்குழு உறுப்பினர் இளையவேல்-200 ரூபாய்
4. திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணி பாடகர் பன்னீர்செல்வம்-100 ரூபாய்
நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன் கொடை: ஆலம்பாக்கம் பாடகர் இராவணன்-1000 ரூபாய்.
No comments:
Post a Comment