வருமான வரி ரீபண்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 28, 2021

வருமான வரி ரீபண்டு

நடப்பு நிதியாண்டில், கடந்த 22ஆம் தேதி வரையிலான காலத்தில், மொத்தம் 1.23 லட்சம் கோடி ரூபாய் ரீபண்டு வழங்கப்பட்டுள்ளதாக, வருமான வரித் துறை அறிவித்துள்ளது.வருமான வரி தாக்கல் செய்த, கிட்டத்தட்ட 1.11 கோடி பேர்களுக்கு, இந்த ரீபண்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் இத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

ஏர்டெல் 5ஜி பரிசோதனை

பார்தி ஏர்டெல் நிறுவனம், இந்தியாவில் அதன் முதல் 5ஜி சோதனையை, நோக்கியா நிறுவனத்துடன் மேற்கொண்டதாக தெரிவித்து உள்ளது.இந்த 5ஜி சோதனை முயற்சி, கொல்கத்தா நகருக்கு வெளியே நடத்தப்பட்டதாகவும் ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. நோக்கியா நிறுவனத்திடமிருந்து 5ஜி சோதனைக்கான சாதனங்களை பெற்று, இந்த பரிசோதனை முயற்சியை ஏர்டெல் நடத்தி உள்ளது.

கோல் இந்தியா முதலீடு

கோல் இந்தியா நிறுவனம், அடுத்த நான்கு முதல் அய்ந்து ஆண்டுகளில், 4050 ஆயிரம் கோடி ரூபாயை மூலதன செலவுகளுக்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில், நடப்பு நிதியாண்டில் 17 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை மேற்கொள்ள இருப்பதாகவும், இதுவரை 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் மதிப்பில் மாறுபாடு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தின் 20 சதவீத பங்குகளை, சவுதி அராம்கோ நிறுவனம் வாங்குவது நின்றுபோனதற்கு காரணம், மதிப்பீடு குறித்த வேறுபாடுகள் தான் என்கிறார்கள். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மதிப்பு குறித்து, இரு நிறுவனங்களுக்கும் இடையே மாறுபட்ட கருத்து ஏற்படவும், இரண்டு ஆண்டுகளாக நீடித்து வந்த விஷயம், ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாக கூறுகிறார்கள்.

ஏசர் மடிக்கணினி தயாரிப்பு

பிரபல ஏசர் இந்தியா நிறுவனம், நொய்டாவைச் சேர்ந்த டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து, மடிக்கணிகளை தயாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.டிக்சன் நிறுவனத்தின் ஆலை, ஆண்டு ஒன்றுக்கு 5 லட்சம் மடிக்கணினிகளை தயாரிக்கும் அளவிலான திறன் கொண்டதாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment