ஆஸ்திரியாவில் தடுப்பூசி போடாவிட்டால் ரூ.3 லட்சம் அபராதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 28, 2021

ஆஸ்திரியாவில் தடுப்பூசி போடாவிட்டால் ரூ.3 லட்சம் அபராதம்

வியன்னா, நவ. 28 பிற நாடுகளின் அரசுகள் கரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள மக்களை கெஞ்சிக் கொண்டிருக்க, அதைக் கட் டாயமாக்கியிருக்கிறது ஆஸ்திரியா. வரும் பிப்ரவரி 1-ஆம் தேதியிலிருந்து இது நடை முறைக்கு வருகிறது.

இத்தாலியிலும் பிரான்சிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றவர்களுக்குதான் தடுப்பூசி கட்டாயமாக உள்ளது. ஒட்டு மொத்த மக்களையும் கட்டாயப் படுத்தும் முதல் அய்ரோப்பிய நாடு ஆஸ்திரியாதான். பிப்ரவரி 1, 2022 வரைதடுப்பூசி போட்டுக் கொள் ளாதவர்களுக்கு 3,600 யூரோக்கள் (சுமார்ரூ.3 லட்சம்) அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத் தாதவர்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

அரசு என்னதான் கதறினாலும், ஆஸ்திரிய மக்களில் கணிசமான வர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுக்கிறார்கள். 66 % மக்கள்தான் தடுப்பூசி போட்டுள்ளனர். இது பதறக் கூடிய சதவிகிதம் இல்லையே என்பவர்களுக்கு ஒரு தகவல். ஆஸ்திரியாவில் ஜூலை மாதத்தில் கரோனா பாதிப்பே புதிதாக யாருக்கும் கிட்டத்தட்ட இல்லை என்ற நிலையிலிருந்து நவம்பர் மாதத் தொடக்கத்தில் தினமும் 14 ஆயிரம் பேர் என்ற அளவுக்கு கரோனா பரவி வருகிறது.

இப்போதைக்கு ஆஸ்திரியா முழுவதும் ஊரடங்கு சட்டம் நிலவுகிறது. முக்கியமாக 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத வர்கள் வீட்டுக்கு வெளியே வரக் கூடாது என்கிறது சட்டம். பள்ளிகள் இயங்குகின்றன. முகக் கவசம் அணிவது கட்டாயம் என்பதோடு வீட்டிலிருந்தே பாடங் களை கற்கும் வசதியையும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கலாம்.

இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்குக் கூட 7 முதல் 9 மாதங்கள் வரைதான் அந்த தடுப்பூசியின் பாதுகாப்பு நிலவும் என்றும், அதற்கு அடுத்த 4 மாதங்களுக்குள் ஒரு பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டு வர வேண்டும் என்றும் ஆஸ்திரிய அரசு கூறுகிறது.

ஆஸ்திரிய அரசின் நடவடிக் கைகளை சர்வாதிகாரம் என்று கடுமையாக விமர்சிக்கின்றன எதிர்க்கட்சிகள். எதிர்ப்பு ஊர்வல மும் அங்கு நடைபெற்றது.

ஒரு நாட்டின் மிகப் பெரும் பாலான மக்களுக்கு தடுப்பாற்றல் உருவாகிவிட்டால் அந்த வைரஸ் பரவுவது நின்றுவிடும். இந்த நிலையை கூட்ட நோய்த் தடுப்பு (ஹெர்டு இம்யூனிடி) என்பார் கள். இதை அடையத்தான் நாடுகள் முட்டிமோதிக் கொண்டிருக் கின்றன. அதற்காகக்ததான் மேற்படி சலுகைகளும் தண்டனையும். உலக சுகாதார அமைப்பின் மண்டல இயக்குநர் டாக்டர் ஹான்ஸ் க்ளூஜ் என்பவர்அய்ரோப்பாவில் கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்னும் சில மாதங்களிலேயே மேலும் 50 லட்சம் இறப்புகள் நேரிடும்என்று எச்சரித்திருக்கிறார்.

No comments:

Post a Comment