9:11:2021இல் மறைவுற்ற ஈரோடு மண்டல திராவிடர் கழக தலைவர் சுயமரியாதை சுடரொளி ப.பிரகலாதன் இல்லத்திற்கு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் இ.திருமகன் ஈவெரா 25.11.2021 அன்று நேரில் சென்று, சுயமரியாதை சுடரொளி ப.பிரகலாதன் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். ப.பிரகலாதன் மனைவி மாதம்மாள், தங்கைகள் ஈஸ்வரி, ஜீவா, தம்பி அர்ஜுனன், மணிமாறன் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். அப்போது பகுத்தறிவாளர் கழக ஆசிரியர் பாலசுப்பிரமணியம், பெரியார் பண்ணையின் திராவிட நாற்று தே.தேவேந்திரன், பென்ஜான்சன் ஆகிய கழக பொறுப்பாளர்களும், காங்கிரஸ் பேரியக்கத்தின் பொறுப்பாளர்களும் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment