சென்னை, நவ.29 மக்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடுத்து துணிப் பைகளை உப யோகிக்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை என்ற இயக்கத்தை தமிழ்நாடு அரசு முன்னெடுக்க இருக்கிறது.
இதுகுறித்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மை செய லாளர் சுப்ரியா சாகு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட் டிருப்பதாவது:-
பிளாஸ்டிக் தீங்கு
பிளாஸ்டிக்கால் இந்த உலகம் மிகப்பெரிய பிரச்சி னையை சந்தித்து வருகிறது. ஒருமுறை உபயோகித்து வீசப்படும் பிளாஸ்டிக்குகள் 40 சதவீதம் உலகளவில் தயார் செய்யப்படுகின்றன. மக்களின் அன்றாட வாழ்க்கையில் அவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அவை தூக்கி வீசப் பட்ட பிறகு சுற்றுச் சூழலில் பல ஆயிரம் ஆண்டுகள் தங்கி விடுகின்றன. இவற்றால் மண், ஆறுகள், கடல்களில் மிகப் பெரிய பிரச்சினைகள் உருவா கின்றன. குறிப்பிட்ட அளவு பிளாஸ்டிக்குகள் எரிக்கப்படும் போது, அவற்றில் இருந்து வரும் புகை கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்துகின் றது. இந்த பிளாஸ்டிக்கினால் ஒவ்வொரு ஆண்டும் ஏராள மான மிருகங்கள் பலியாகின்றன.
பிளாஸ்டிக் கழிவுகள்
பன்னாட்டு இயற்கை பாது காப்பு அமைப்பு, ஆண்டுதோறும் உலகளவில் 14 மில்லியன் டன் பிளாஸ்டிக்குகள் கடலில் சென்று சேருவதாக ஒரு புள்ளி விவரத்தை கூறுகிறது.
ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரி யத்தின் தகவலின்படி 2019-20ஆம் ஆண்டில் 34 லட்சத்து 69 ஆயிரத்து 780 டன் பிளாஸ்டிக் கழிவுகள் இந்தியாவில் தேக்கமடைந்தன. தமிழ்நாட்டில் மட்டும் 4 லட்சத்து 31 ஆயிரத்து 472 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அந்த ஆண்டில் தேங்கியிருந்தன.
மீண்டும் மஞ்சப்பை
இந்த பிளாஸ்டிக்குகளுக்கு எதிரான மக்கள் இயக்கத்தை அரசு ஆதரிக்கும். மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் தடை உத்தரவு அமல்படுத்துவதை கண்காணிப்ப தற்கான வழிமுறைகள் வகுக்கப்படும்.
இந்த பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாக மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை தயாரிப்பதற்கு குறு-சிறு மற்றும் நடுத்தர நிறு வனங்களுடன் அரசு இணைந்து செயல்படும். அதன்படி மீண்டும் மஞ்சப்பை என்ற தலைப்பில் மாநில அளவில் பிரசாரம் மேற் கொள்ளப்படும். மஞ்சப்பை என்பது தமிழ்நாடு கலாச்சாரத் தில் இணைந்த ஒன்றாகும்.
ஜெர்மன் நாட்டின் அமைப்புடன் இணைந்து...
இந்த மஞ்சப்பை பிரச்சாரத் தின் மூலம் மக்கள் பிளாஸ்டிக் பைகளை புறக்கணித்து துணிப் பைகளை மீண்டும் பயன்படுத்து வதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இந்த திட்டத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஜெர்மன் நாட்டின் அமைப் புடன் இணைந்து செயல் படுத்தும். பொட்டலம் போடு வதற் கான சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் அடை யாளம் காணப்படும்.
பள்ளி-கல்லூரிகளில் இந்த பிரச்சாரம் முன்னெடுக்கப்படும். இளைஞர்கள் இந்த பிரச் சாரத்துக்காக பயன்படுத்தப்படு வார்கள். இதற்காக மாநில மற்றும் மாவட்ட அளவிலான பணிக்குழுக்கள் அமைக்கப் படும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment