பி.என்.பி.எல்., பயன்பாடு-மனதில் கொள்ள வேண்டிய அம்சங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 2, 2021

பி.என்.பி.எல்., பயன்பாடு-மனதில் கொள்ள வேண்டிய அம்சங்கள்

புதுடில்லி, நவ. 2- பொருட்களை வாங்கிய பின் பணம் செலுத்த வழி செய்யும்பை நவ் பே லேட்டர்எனும் பி.என்.பி.எல்., பணம் செலுத் தும் முறை, பயனாளிகள் மத் தியில் பிரபலமாகி வருகிறது.

குறிப்பாக இளம் வயதி னர் இந்த வசதியை அதிகம் நாடுகின்றனர். எளிதான குறு கிய கால கடனாக அமையும், இந்த முறையில் பணம் செலுத்தும் வசதியை நிதி நுட்ப நிறுவனங்கள், -காமர்ஸ் நிறுவனங்கள் தவிர, முன் னணி வங்கிகளும் வழங்கத் துவங்கியுள்ளன. பி.என். பி.எல்., வசதியை பயன்படுத் துபவர்கள் மனதில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங் களை பார்க்கலாம்.

கொள்முதல் செய்பவர்கள் பணம் செலுத்தாமல் விரும் பிய பொருட்களை வாங்கி, குறிப்பிட்ட காலத்திற்கு பின் பணம் செலுத்த பி.என். பி.எல்., முறை வழி செய்கிறது. இந்த குறுகிய கால கடன் வசதிக்கு, 15 முதல் 45 நாட்கள் வரை வட்டி இல்லா காலம் அமைகிறது. 500 முதல், 30 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெறலாம்.

அண்மைக் காலத்தில் நிதி நுட்ப நிறுவனங்கள் தவிர, ‘அமேசான், பிளிப் கார்ட்ஆகிய நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் இந்த வச தியை அளிக்கத் துவங்கியுள் ளன. ‘கேட்ஜெட்கள், ஆடை கள், மளிகைப் பொருட்கள் என பல வகை பொருட்களை வாங்கி பின்னர் பணம் செலுத்தலாம். பயணச்சீட்டுப் பதிவும் செய்து கொள்ளலாம்.

கிரெடிட் கார்டுஇல்லாத வர்கள், தேவையான பொருட் களை வாங்கி பின்னர் பணம் செலுத்தலாம். கிரெடிட் வரலாறு போன்றவையும் ஒரு பிரச்சினை அல்ல. ஆனால், சலுகை காலத்திற் குள் பணத்தை செலுத்த வேண்டும்; இல்லை எனில் வட்டி கட்ட வேண்டும். தாமத கட்டணமும் விதிக்கப் படலாம்.

கிரெடிட் கார்டு போன்றது என்றாலும், பி.என்.பி.எல்., வசதியில் சில வேறுபாடுகள் உண்டு. கிரெடிட் கார்டை எல்லா இடங்களிலும் பயன் படுத்தலாம். பி.என்.பி.எல், வசதியை பங்குதாரர் நிறுவ னங்களில் மட்டுமே பயன் படுத்த முடியும். ஆனால், கிரெடிட் கார்டு போல இதற்கு தகுதி வரம்புகள் இல்லை.

பொருட்களை வாங்கி விட்டு, தவணை முறையில் பணத்தை குறிப்பிட்ட காலத்தில் செலுத்த முடிவது சாதகமானது. தேவையான பொருட்களை வாங்க இது உதவும். ஆனால், சரியாக திட்டமிட்டு செயல்படுவது அவசியம். சிறிய தொகை என்பதால், கடனில் வாங்கு வது ஒரு பழக்கமாக மாறி னால் சிக்கல் தான்.

No comments:

Post a Comment