ரோம், நவ. 2- பொருளாதார வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும் அமெ ரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர் மனி, ஜப்பான், கனடா மற்றும் இங்கிலாந்து ஆகிய 7 நாடுகளை உள்ளடக்கிய ‘ஜி7’ கூட்டமைப்பின் 46-ஆவது உச்சி மாநாடு இங்கி லாந்து தலைநகர் லண்டனில் கடந்த ஜூன் மாதம் நடந்தது.
இந்த மாநாட்டில் பன்னாட்டு வரி விதிப்பு சீர்திருத்தம் தொடர் பாக வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின்படி பன் னாட்டு நிறுவனங்கள் தங்கள் லாபத்தில் குறைந்தபட்சம் 15 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து இந்த ஒப் பந்தம் ‘ஜி20’ நாடுகளின் ஒப்புத லுக்காக முன்வைக்கப்படும் என ‘ஜி7’ கூட்டமைப்பு தெரிவித்திருந் தது.
இந்தநிலையில் பொருளாதா ரத்தில் பெரிய நாடுகளாக திகழ்கிற ‘ஜி20’ நாடுகளின் உச்சி மாநாடு இத்தாலி தலைநகர் ரோமில் 30.11.2021 அன்று தொடங்கியது. கரோனா தொற்று தொடங்கிய பின்னர் ‘ஜி20’ நாடுகளின் தலை வர்கள் நேரடியாக கலந்து கொள் ளும் முதல் சந்திப்பு இது.
இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதி பர் ஜோ பைடன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உள் பட உறுப்பு நாடுகளின் தலைவர் கள் பலரும் கலந்து கொண்டனர்.
எனினும் சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகிய இருவர் மட்டும் நேரடியாக கலந்து கொள் ளாமல் காணொலி வழியாக கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு 15 சதவீதம் வரிவிதிக்கும் ஒப்பந்தத்தை அமெரிக்கா முன்மொழிந்தது. இந்த ஒப்பந்தத் துக்கு ‘ஜி20’ நாடுகளின் தலைவர் கள் ஒரு மனதாக ஒப்புதல் அளித்த னர். இந்த ஒப்பந்தம் 2023ஆ-ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பன்னாட்டு வரி விதிப்பில் சீர்திருத்தம் செய்து இந்த ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
* நிறுவனங்கள் எந்த நாட்டில் செயல்பட்டு லாபம் ஈட்டுகிறதோ, அந்த லாபத்துக்கான வரியை அந்த நாட்டில்தான் செலுத்த வேண்டும்.
* குறைந்தபட்சம் 10 சதவீதம் லாபம் ஈட்டும் எல்லா பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.
* நாடுகளிடையே தொழில் வரி விதிப்பில் ஏற்றத்தாழ்வுகளை களையும் வகையில், பன்னாட்டு குறைந்தபட்ச தொழில் வரி 15 சதவீதமாக நிர்ணயிக்கப் பட வேண்டும்.
No comments:
Post a Comment