கார்டூம், நவ. 2- வடஆப்பிரிக்க நாடு களில் ஒன்றான சூடானில் கடந்த 2019ஆ-ம் ஆண்டு நடந்த ராணுவ புரட்சியை தொடர்ந்து, அங்கு ராணுவம் மற்றும் மக்கள் குழுக் களை உள்ளடக்கிய இடைக்கால அரசு நடந்து வந்தது.
இந்த சூழலில் இடைக்கால அரசில் அங்கம் வகிக்கும் ராணு வத்தை சேர்ந்தவர்களுக்கும் குடி மக்களின் பிரதிநிதிகளான தலை வர்களுக்கும் இடையில் அண்மைக் காலமாக மோதல் போக்கு அதி கரித்தது.
இந்தநிலையில் கடந்த வாரம் ராணுவ தளபதி அப்தெல் பட்டா அல்-புர்கான் தலைமையிலான ராணுவம் இடைக்கால அரசை கவிழ்த்து விட்டு ஆட்சி அதிகா ரத்தை கைப்பற்றியது.
இடைக்கால பிரதமர் அப் தெல்லா ஹாம்டோக்கை பதவியில் இருந்து நீக்கிய ராணுவம், விரை வில் புதிய பிரதமர் நியமிக்கப் படுவார் என அறிவித்தது.
மேலும் நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.
இதனிடையே ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பிரதமர் அப் தெல்லா ஹாம்டோக்கை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என வலியுறுத்தி அந்த நாட்டு மக் கள் போராட்டத்தில் குதித்தனர்.
தலைநகர் கார்டூம் உள்பட நாடு முழுவதும் பல்வேறு நகரங் களில் பல்லாயிரக்கணக்கான மக் கள் வீதியில் போராடி வருகின்றனர்.
மக்களின் இந்த போராட் டத்தை ராணுவம் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கத் தொடங்கியுள்ளது.
அந்த வகையில் அந்த நாட்டின் 2-வது மிகப்பெரிய நகரமான ஒம்டுர்மன் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவ வீரர் கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும் 100-க்கும் அதிகமானோர் படுகாய மடைந்ததாகவும் தகவல்கள் தெரி விக்கின்றன.
No comments:
Post a Comment