கிராமப்புற பெண்களுக்கும் மாதவிடாய் கப் சென்றடைய வேண்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 2, 2021

கிராமப்புற பெண்களுக்கும் மாதவிடாய் கப் சென்றடைய வேண்டும்!

மாதவிடாய்... ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கையில் எதிர்கொள்ள வேண்டிய விஷயம். பெண்கள் பூப்ப டைந்த பிறகு அவர்கள் உடலில் மாதந் தோறும் சுழற்சி முறையில் நிகழும் மாற்றம் தான் மாதவிடாய். தொழில்நுட்ப ரீதியாக நாம் பல மாற்றங்களை தாண்டி தினமும் பயணித்துக் கொண்டு இருக் கிறோம்.

ஆனால் இன்றும் மாதவிடாய் குறித்தும் அதனால் பெண்களுக்கு  ஏற் படும் பிரச்சினை குறித்தும் நாம் வெளிப் படையாக பேச மறுக்கிறோம். பள்ளி, அலுவலகம் மற்றும் பொது இடங்களில் அந்த நாட்கள் குறித்து தயக்கத்துடன் தான் இன்றும் பெண்கள் பேசுகிறார்கள். அந்த மனநிலையில் எந்த மாற்றமும் ஏற்பட வில்லை. பெண்களுக்குள் மட்டுமே இது குறித்து ரகசியமாக பகிரப்பட்டு வருகிறது.

நகர்ப்புறங்களிலே பெண்கள் பேசத் தயங்கும் போது, கிராமத்தில் பெண்கள் இதனால் படும் அவஸ்தைப் பற்றி சொல்லித்தான் புரியவைக்க வேண்டும் என்றில்லை. இன்றும் மாதவிடாய் குறித்த விழிப்புணர்ச்சியும், அந்த நேரத்தில் எவ்வாறு சுகாதாரமாக பெண்கள் இருக்க வேண்டும் போன்ற விழிப்புணர்வு குறித்தும் விவாதிக்கும் நபர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இன்றைய காலத்தில் பெண்கள் ஒன்பது அல்லது பத்து வயதிலேயே பூப்படைந்து விடுகிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அந்த நேரத்தில் எவ்வாறு தங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு இல்லை.

நகரப் பெண்களிடம் இது குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு வந்தாலும், கிராமத்தில் இன்றும் பெண்கள் அந்த சமயத்தில் ஏற்படும் தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். இன்று சாதாரண கந்தல் துணியில் இருந்து நேப்கின்களுக்கு மாறி உள்ளனர் என்பது வரவேற்கக்கூடியது என்றாலும் அதையும் அவர்கள் சரியான முறையில் பயன் படுத்தாமல் பல பிரச்சினைகளுக்கு ஆளா கிறார்கள். நேப்கின்களின் மாற்றாக மாத விடாய் கப் மற்றும் டாம்பூன்கள் வந்து விட்டன. இவையும் கிராமப்புற பெண் களுக்கு சென்றடைய வேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கம் என்கிறார் பெங்களூரைச் சேர்ந்த இரா குஹா. இவர் கிராமப்புற பெண்களின் வசதிக்காகவே மாதவிடாய் கப்பினை வடிவமைத்து வழங்கி வருகிறார்.

இந்த கப்பினை மருத்துவ துறையில் பயன்படுத்தப்படும் சிலிக்கான் கொண்டு தயாரிக்கிறோம். கப்பை அகற்ற அதன் அடியில் பிரத்யேக ரிங் போன்ற அமைப்பு  பொருத்தப்பட்டுள்ளது. மற்ற மாதவிடாய் கப்பினை விட இதனை பயன்படுத்துவது எளிது. இந்த கப்களை 10 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம் என்றவர் ஒன்று  வாங்கினால் ஒன்றை நன்கொடையாக வழங்கலாம் என்ற திட்டத்தின் மூலம் கிராமப்புற பெண்களுக்கு இந்த கப்பினை அளித்து வருகிறார்.

மாதவிடாய் நாட்களில் சுத்தம் மற்றும் சுகாதாரம் மிகவும் அவசியம். இப்போது நேப்கின், டேம்பூன், மென்சுரல் கப் என பல பொருட்கள் மாதவிடாய் காலத்தில் பயன்பாட்டில் இருந்தாலும், அதை தர மானதாக வாங்கி பயன்படுத்த வேண்டும். பள்ளி மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் 3 அல்லது 4 மணி நேரத்துக்கு ஒரு முறை நேப்கின் மாற்றுவதை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும் என கூறுகிறார் இரா. குஹா

No comments:

Post a Comment