லக்னோ, நவ. 3- உத்தரப்பிர தேசத்தில் ஆண்டுக்கு 3 இலவச எரிவாயு, பேருந் தில் பெண்களுக்கு இல வச பயணம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் பொதுச் செய லாளர் பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட் சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி நாள் தோறும் புதுப்புது அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில் பிரியங்கா காந்தி தனது சுட்டுரைப் பதிவில், ‘உத்தரப்பிரதேச பெண்களுக்கு காங்கிரஸ் கட்சி தனி தேர்தல் வாக் குறுதிகளை உருவாக்கி உள்ளது. உத்தரப்பிரதே சத்தை சேர்ந்த என தருமை சகோதரிகளே., உங்களு டைய ஒவ்வொரு நாளும் போராட்டம் நிறைந்ததாக இருக்கின் றது.
காங்கிரஸ் கட்சி இதனை புரிந்து கொண்டு பெண்களுக்காக பிரத் யேக தேர்தல் அறிக் கையை தயாரித்துள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு உரு ளைகள் வழங்கப்படும். அரசு பேருந்துகளில் பெண் கள் இலவசமாக பயணம் செய்யலாம். விதவைக ளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்’ என குறிப் பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment