வீட்டுக்காவலில் மெகபூபா முப்தி ஜனநாயக கட்சி குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 3, 2021

வீட்டுக்காவலில் மெகபூபா முப்தி ஜனநாயக கட்சி குற்றச்சாட்டு

சிறீநகர், நவ.3 காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி யின் தலைவர் மெகபூபா முப்தி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி குற்றம் சாட் டியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையின ருக்கும் தீவிரவாதிகளுக் கும் இடையே கடந்த மாதம் 24ஆம் தேதி சோபி யான் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அனந்த்நாக் மாவட் டத்தை சேர்ந்த சாகித் அகமத் என்ற இளைஞர் சுட்டுக் கொல் லப்பட்டார். மக்கள் ஜன நாயக கட்சி (பிடிபி) தலை வர் மெகபூபா முப்தி, பாதிக் கப்பட்ட அகமதுவின் குடும்பத்தினரை சந்திக்க அனந்த்நாக் செல்ல இருப்பதாக அறிவித்தார்.  இதையடுத்து, குப்காரில் உள்ள அவர் வீட்டில் அவர் வீட்டுக்காவலில் வைக்கப் பட்டுள்ளார்.

இது குறித்து அக்கட் சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவிக்கையில், "சாகித்தின் குடும்பத்தி னரை சந்தித்து ஆறுதல் கூற மெகபூபா அனந்த் நாக் செல்ல இருந்தார். ஆனால், அவர் அங்கு செல்ல அனும திக்கப்பட வில்லை. காவல்துறையி னர் அவரது வீட்டின் முன்புற கேட்டை பூட்டு போட்டு பூட்டி விட்ட னர். இதனால், அவர் வீட்டுக் காவலில் வைக் கப்பட்டுள்ளார். மேலும், அவரது வீட்டிற்கு முன் பாக காவல்துறை வாக னமும் நிறுத்தப்பட்டுள் ளது’’ என்று தெரிவித்தார்.

கடந்த 2018ஆம் ஆண்டு பூஞ்ச் மாவட்ட எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் பகுதிக்குள் தவறுதலாக நுழைந்த கங்கரியான் கிராமத்தை சேர்ந்த சைப் தீன் என்பவரை பாகிஸ் தான் ராணுவம் மனிதநேய அடிப்படையில் இந்திய ராணுவத்திடம் திரும்பி ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment