புதுடில்லி, நவ.3- கரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கி, 2 ஆண்டுகளுக் குள்ளாகவே உலக அள வில் பலி எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டி உள் ளது. பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தி லும், இந்தியா 3ஆவது இடத்திலும் இருக்கின் றன.
கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் இறுதி யில் சீனாவில் கரோனா எனும் கொடிய வைரஸ் உருவானது. அடுத்த சில மாதங்களிலேயே உலகம் முழுவதும் பரவிய இந்த கொலைகார வைரஸ், ஏழை, பணக்கார நாடுகள் என எந்த வித்தியாசமு மின்றி அனைவரையும் தாக்கி அழித்தது. வலு வான சுகாதார கட்ட மைப்புகளைக் கொண்ட அமெரிக்கா போன்ற நாடுகளும் கரோனாவை வெல்ல முடியவில்லை. இந்தியாவில் கரோனா 2ஆவது அலை மிக மோச மான பாதிப்புகளை ஏற் படுத்தியது.
உலகம் முழுவதும் இதுவரை கரோனாவுக்கு 24 கோடியே 68 லட்சத்து 15 ஆயிரத்து 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 50 லட்சத்து 1,871 பேர் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக அமெரிக் காவில் 4 கோடியே 59 லட்சத்து 71 ஆயிரத்து 267 பேர் பாதிக்கப்பட்டு, 7 லட்சத்து 45 ஆயிரத்து 836 பேர் இறந்துள்ளனர். பலி எண்ணிக்கையில் அதற்கு அடுத்த இடத்தில் பிரேசிலில் 6 லட்சத்து 7 ஆயிரத்து 824 பேர் இறந் துள்ளனர். 3ஆவது இடத் தில் உள்ள இந்தியாவில் 4 லட்சத்து 58 ஆயிரத்து 437 பேர் இறந்துள்ளனர். 3 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரத்து 814 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2 ஆண்டாகியும் கரோ னாவின் தாக்கம் இன்னும் முடியவில்லை. இப்போ தும் ரஷ்யா, சிலி உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கரோனா பலி, பாதிப்பு கள் அதிகரிக்கின்றன. இது மட்டுமின்றி கரோனா பலி எண்ணிக்கையை உலக நாடுகள் குறைத்து காட்டுவதாகவும் பல ஆய்வு நிறுவனங்கள் புகார் கூறுகின்றன. உண்மை யான கரோனா பலி இன் னும் பல மடங்கு அதிக மாக இருக்கும் என கூறப் படுகிறது.உலகம் முழு வதும் கடந்த 1950ஆம் ஆண்டுக்குப் பிறகு நடந்த போரில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக் கையை விட கரோனா பலி அதிகமாகும். இதய நோய், பக்கவாதத்திற்குப் பிறகு அதிக மனித உயிர் களை பறித்த கொடிய நோயாக கரோனா அறி யப்படுகிறது.
No comments:
Post a Comment