வெள்ள அபாய எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 3, 2021

வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர், நவ.3 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:

ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அம்மம் பள்ளி அணையிலிருந்து திறந்து விடப்பட்டுள்ள 1000 கன அடி நீர், நகரி ஆறு வழியாக 2ஆம் தேதி நள்ளிரவு பூண்டி நீர்த்தேக்கம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வருவாய்த் துறை, காவல்துறை மற் றும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். மேலும் நகரி ஆற்றில் பள்ளிப்பட்டு பாலத்திலி ருந்து பூண்டி நீர்த்தேக்கம் வரை கரையோரம் உள்ள கிராம மக்கள் எச்சரிக் கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள் ளது.

No comments:

Post a Comment