மாநில தேர்தல் ஆணையர்
சென்னை, நவ 3- தமிழ்நாட்டில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சவால்கள் நிறைந் தது என்று மாநிலதேர்தல் ஆணையர் எஸ்.பழனிக் குமார் கருத்து.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற் கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உதவி தேர்தல் அலுவ லர்கள் நியமிக்கப்பட்டு, வார்டு வாரியாக வாக்கா ளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் மின் னணு வாக்குப்பதிவு இயந் திரங்கள் பயன்படுத்தப் பட உள்ள நிலை யில், பல் வேறு பகுதிகளில் பாது காப்பாக வைக்கப்பட் டுள்ள வாக்குப்பதிவு இயந் திரங்களை சரிபார்க்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையர் வெ. பழனிகுமார் தலைமை யில், சென்னை, திருவள் ளூர், காஞ்சிபுரம், செங் கல்பட்டு மாவட்டங்கள் அடங்கிய சென்னை மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று முன்தினம் நடை பெற்றது. இதில் ஆணை யர் பெ.பழனிகுமார் பேசி யதாவது: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை அமைதியாக நடத்த அலு வலர் களின் ஒத்துழைப்பு அவ சியம். தேர்தலை நடத்தி முடிப்பதற்கான கால அளவு குறைவாக உள் ளது. உச்ச நீதிமன்றம் 4 மாதங்கள் மட்டுமே அவ காசம் வழங்கியுள்ள தால், குறிப்பிட்ட தேதிக் குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். அத னால் நகர்ப் புற உள் ளாட்சித் தேர்தல் நடத்து வது சவால்கள் நிறைந்தது.
2006இ-ல் கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு பேரூராட்சிகள், 3-ம் நிலை நகராட்சிகள், நகராட்சி கள் மற்றும் மாநகராட்சி கள் விதிகள் அடிப்படை யில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த விதிகள் குறித்து அலுவலர்கள் தெரிந்துகொண்டால், சட்டரீதி யாகவும், அமை தியாகவும், நேர்மையா கவும் தேர்தலை நடத்தி முடிக்கலாம். அதற்கான பயிற்சி அளிக்கவே இந் தக் கூட்டம் நடத்தப்படுகி றது. எனவே, தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க அனைத்து அலு வலர்க ளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ் வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மாநில தேர்தல் ஆணையச் செய லர் எ.சுந்தரவல்லி, சென் னை மாவட்ட ஆட் சியர் ஜெ.விஜயராணி, திருவள் ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாநக ராட்சி துணை ஆணையர்கள் விஷு மகாஜன், டி.சிநேகா, எஸ்.மனீஷ், எண்.சிவகுரு பிரபாகரன், சிம்ரன் ஜீத் சிங் காஹ்லோன், செங்கல் பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொ.விஜயகுமார் உள் ளிட் டோர் கலந்து கொண் டனர்.
No comments:
Post a Comment