கோவிட் தடுப்பூசி செலுத்தாத அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 6, 2021

கோவிட் தடுப்பூசி செலுத்தாத அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை

சிங்கப்பூர், நவ.6  சிங்கப்பூரில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு, ஊதியம் இல்லா விடுப்பு வழங்கப்படும்என, அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், கரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை, மீண்டும் அதிகரிக்கத் துவங்கி உள்ளது.  ஒரே நாளில் 3,635 பேர் பாதிக்கப்பட்டனர்; 12 பேர் உயிரிழந்தனர். இதுவரை, 2.07 லட்சம் பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்; 442 பேர் உயிரிழந் துள்ளனர். தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவ தால், வைரஸ் பரவலை கட்டுப் படுத்த, சிங்கப்பூர் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது.

கடந்த அக்டோபர் 23ஆம் தேதி, நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை பிறப்பித்தது.

அதில், ‘கரோனாவுக்கான தடுப் பூசியை முழுமையாக செலுத்திய அரசு ஊழியர்கள் மட்டுமே, வரும் 2022 ஜனவரி 1ஆம் தேதி முதல் மீண்டும் அலுவலகத்திற்கு வர அனுமதிக்கப்படுவர்என, தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அதுகுறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:அரசு ஊழியர்கள், 3,000க்கும் மேற்பட்டோர், இதுவரை கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாமல் உள் ளனர். அவர்கள் அனைவரும், தடுப்பூசியை விரைந்து செலுத்திக் கொள்ள வேண்டும். அப்படி செலுத்திக்கொள்ளாத ஊழி யர்கள், ஊதியம் இல்லாத விடுப் பில் இருப்பதாகவே கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.

மருத்துவ காரணங்களால் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஊழியர்களுக்கு, வீட்டில் இருந்து பணியாற்றும் வகையிலான பணிகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment