சேலம், நவ. 28- சேலம் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் சேலம் அம்மாப்பேட்டை, குயில்பண்ணையில் 21.11.2021 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற கூட்டத்தில் தமிழர் தலைவர் பிறந்த நாள் விழாவையொட்டி கழகத் துணைத் தலைவர் கவிஞர் அவர்கள் சேலம் வருகை (5.12.2021) பற்றி கலந்துரையாடல் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் சு.ச.இளவழகன் வரவேற்புரை ஆற்ற, மாவட்ட தலைவர் கே.ஜவகர் தலைமையேற்க, மண்டலத் தலைவர் கவிஞர் சிந்தாமணியூர் சி.சுப்ரமணி யம், மண்டலச் செயலாளர் விடுதலை சந்திரன் முன்னிலையேற்றனர்.
மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர்பாண்டியன் ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.
தொடர்ந்து மாவட்ட துணை தலைவர் பரமசிவம், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் அ.சுரேஷ், ஆத்தூர் மாவட்ட செயலாளர் சேகர், மா.இசைச்செல்வி, ச.நந்தகோபால், சி.ராமசும், மோகன்ராஜ் உள்ளிட்ட தோழர்கள் வருகை தந்தனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மண்டல மாணவர் கழக செயலாளர் அ.இ.தமிழர் தலைவர் நன்றியுரை கூறினார்.
தீர்மானம் 1: ஈரோடு மண்டல திராவிடர் கழக தலைவர் குருவாரெட்டியூர் பிரகலா தன், சேலம் வீரபாண்டிஇராசா ஆகியோ ருக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.
தீர்மானம் 2: சுயமரியாதை நாளை டிசம்பர் இரண்டாம் தேதி காலை 9 மணிக்கு தந்தை பெரியார் சிலைக்கு மாலையணிவித்து இனிப்பு வழங்கி தமிழர் தலைவரின் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்வதென முடிவு செய்யப்படுகிறது.
தீர்மானம் 3: தமிழர் தலைவர் அவர்களுக்கு 89ஆவது பிறந்த நாள் வாழ்த்தினை மாவட் டக் கழகம் தெரிவித்து கொள்கிறது.
தீர்மானம் 4: தமிழர் தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலைக்கு சந்தாகளை சேர்த்து அளிப்பதென தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 5: தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா நிகழ்வாக 5.12.2021 அன்று கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களை நடுவராகக் கொண்டு சிறப்பான பட்டிமன்றம் மற்றும் நூல் வெளியீட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை எழுச்சி யோடு நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment