தூத்துக்குடி,
நவ. 28- உண்மை வாசகர் வட்டம் தூத்துக்குடி சார்பிலான கருத்தரங்கம் 20.11.2021 அன்று
மாலை 5 மணியளவில் பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது.
கழக மாவட்டத் துணைச்
செய லாளர் இரா.ஆழ்வார் தலைமை யில், திருவை மாநகரத் தி.மு.க பொருளாளர் சொ.பொன்ராஜ் வரவேற்புரையுடன்
நிகழ்ச்சி தொடங்கியது.
தமிழர் தலைவரின்
சிறப்புச் சொற்பொழிவு நூலான, ‘சவார்க் கர் - காந்தியார் - கோட்சே - ஆர்.எஸ்.எஸ்', ஆய்வுக்கு
எடுத்துக் கொள் ளப்பட்டது. சீ.மனோகரன் தொடக் கவுரையாற்றினார். அவர் தம் உரையில், “காந்தியார்,
மதன் மோகன் மாளவியா, திலகர் போன்று இந்துமத சனாதனத்தை முழுக்க ஏற்றுக் கொண்டவர். ஆனால்,
அங்கே அதிகரித்து வரும் தீண்டாமை, இசுலாமியர் எதிரப்பு என்பவை இந்து மதத்தை அழித்து
விடும் என்றார். காந்தியார், இந்துத் துவாவிற்கு எதிரியாக வருகிறார். புதிய கொள்கையை
ஏற்படுத்த முனைகிறார் என்று எண்ணிய சவாரக்கர் கூட்டம் ‘இந்துராஜ்யம்‘ ஏற்படுத்த வேண்டும்
என்ற முடி வெடுத்தனர். மதக்கவவரங்கள் உருவாகிய இடங்களில் ஆர்.எஸ். எஸ். உதயமானது. கோல்வாக்கர்,
கிறித்தவர் பிரச்சாரத்தை முடக் கிட முற்பட்டார். இவ்வாறான சூழலில் தான் காந்தியார்
தம் வளர்ச்சிக்குத் தடங்கலாக இருப் பார் என எண்ணித் திட்டமிட்டுக் கோட்சே என்பவனைக்
கொண்டு சுட்டுக் கொன்றனர்”, என்றார்.
அடுத்து, வாசகர்
வட்டத் தலை வர் மா.பால்ராசேந்திரம் சிறப்புரை யாற்றினர். அவர் தன்னுடைய உரை வாயிலாக,
"தலைப்பிற்கான அவசியம் - 2004 இல் தமிழர் தலை வர் இந்தத் தலைப்பில் உரையாற்ற வேண்டிய
தேவை, இந்துமகாசபை தோன்றியதற்கான காரணங்கள், ஆங்கிலேயர் ஆட்சியால் பார்ப் பனர் பாதிப்பு,
- ஜோதிராவ் பூலே, சாகுமகராஜ் சமூகப் பணிகள், திலகரின் சாதி வெறித்தனம், சவார்க்கரின்
இந்துமகாசபை, இந் துத்துவா நோக்கம், - ஆர்.எஸ்.எஸ். பெயர் மாற்றம் எதற்காக? - காந்
தியார் கொலைக்கான காரணங்கள் - காந்தியார் கொலை முயற்சிகள் - ஆர்.எஸ்.எஸ். தடை, விடுவிப்பு
- படேலின் கருத்து - சவார்க்கர் கைது ஏன்? - காந்தியார் சொல்லி மன்னிப்புக் கேட்டாரா?
- கோட்சே தயாரிப்பு - காந்தியார் கொலை, ஆர்.எஸ்.எஸ். பங்கு - காந்தியவாதி கள் விழித்தனர்
எப்பொழுது?” - என்ற தலைப்புகளின் கீழ விளக்க வுரையாற்றினார். இறுதியாக, தூத் துக்குடி
ஒன்றிய கழக அமைப்பாளர் கோ.முருகன் நன்றி கூறிட நிகழசசி இரவு 7.30 மணியளவில் நிறைவு
பெற்றது.
மாவட்டத் திருக்குறள் பேர வைச் செயலாளர் மோ.அன்பழகன், கவிஞர் கோ.இளமுருகு, திருவை. சு.திருமலைக்குமரேசன், கோபால் சாமி, ராபின் ஞானப்பிரகாசம், செ.சண்முகம், செ.செல்லத்துரை, மண்டல கழக தலைவர் சு.காசி, பொ.போஸ் மற்றும் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்புச் செய்தனர்.
No comments:
Post a Comment