பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவுப் பாசறை 7ஆம் ஆண்டு தொடக்க விழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 28, 2021

பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவுப் பாசறை 7ஆம் ஆண்டு தொடக்க விழா!

சென்னை, நவ. 28- கொரட் டூர் பகுத்தறிவுப் பாசறை யின் 7ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கழக, தி.மு. கழகத் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஆவடி மாவட்டம் கொரட்டூரில், பிரிட்டா னியாவுக்கு எதிரில் உள்ள தொடர்வண்டி நிலைய சாலை தி.மு.க. கிளை கழக அலுவலகத்தில் பெரியார், அண்ணா, கலைஞர் பகுத் தறிவுப் பாசறை 7.11.2015 இல் ஒருங்கி ணைப்பாளர் இரா. கோபால் அவர்க ளின் முன்னெடுப்பால் தொடங்கப்பட்டது.

சனிக்கிழமை தோறும் மாலை வேளைகளில் வெவ்வேறு தலைப்புக ளில், வெவ்வேறு கருத்தா ளர்கள் மூலம் திராவிடக் கருத்தியல்களை மாண வர்களுக்கும், மற்றவர்க ளுக்கும் கொண்டு சேர்ப் பதைக் குறிக்கோளாகக் கொள்ளப்பட்டது. நாளது வரையிலும் அந்த குறிக்கோளிலிருந்து கொஞ்சமும் பிசகாமல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்துள்ளன. இதில், திரா விடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், கழகப் பிரச்சா ரச் செயலாளர் வழக்கு ரைஞர் அ. அருள்மொழி, அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், தி.மு. க.வின் தமிழன் பிரசன்னா உள்ளிட்ட ஏராளமா னோர் பேசியுள்ளனர். 

சிறப்புக் கூட்டங் களில் ஒன்றாக கடந்த மாதம் 9.10.2021 சனிக் கிழமை அன்று மாலை 5 மணிக்கு, தந்தை பெரியா ரின் பிறந்தநாளை ”சமூக நீதிநாள்” என்று அறிவித்த தமிழ்நாடு முதல் வரை பாராட்டும் விதமாக, பகுத்தறிவுப் பாசறையின் பொறுப்பில் அமைக்கப் பட்டுள்ள திராவிடர் கழகக் கொடிக் கம்பத்தின் பீடத்தில், ”தந்தை பெரியார் பிறந்த நாள் - செப் 17  - சமூகநீதிநாள்” எனும் பெயரில் கல் வெட்டு அமைத்து, அதை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் சிறந்து வைத் தார்.

பொதுவாக நிகழ்வு தொடங்குவதற்கு முன் ‘விடுதலை'யின் தலை யங்கம், அல்லது ஆசிரி யரின் அறிக்கை, முரசொ லியில் வந்த ஏதாவதொரு முக்கியச் செய்தி ஆகிய வற்றில் ஏதாவது ஒன்றை வாசித்தோ, மாணவர் களை வாசிக்கவைத்தோ தான் நிகழ்ச்சி தொடங் கப்படும். அப்படிப்பட்ட அரிய தொண்டின் தொடர்ச்சியாக, 7.11.2021 அன்று பாசறையின் 7 ஆண்டு தொடக்க விழா மிகச் சிறப்பாக கொண் டாடப்பட்டது. 

இந்நிகழ்வில் பாசறை யின் ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் அவர்க ளின் தொண்டினைப் பாராட்டும் விதமாக தி.மு.க. மாவட்ட பிரதிநிதி கு.சங்கர், பா.முத் தழகு, கழக மாவட்டச் செயலாளர் க.இளவர சன், கொரட்டூர் பன் னீர்செல்வம் ஆகியோர் ஆடையணிவித்தும், அவரது தொண்டு தொட ரவும் வாழ்த்திப் பேசினர். அம்பத்தூர் பகுதி கழகத் தோழர் இராமலிங்கம் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கியும், வாழ்த்தியும் சிறப்பித்தார். இறுதியில் இரா.கோபால் தனது தொண்டு தொடரும் எனவும், அதற்கு அனை வரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என் றுக் கேட்டு கொண்டார். நிகழ்வில் ஆவடி மாவட்ட திராவிடர் கழகத் தோழர் கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment