நாகர்கோவில்,நவ.5- குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக பெரியாரியல் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது.
பொருளாதார மேதை டாக்டர் பா. நடராஜன் நினைவாகவும் மாவட்ட கழகம் சார்பாகவும் பரிசுகளை மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கி வழங்கினார். மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். மாவட்ட கழக அமைப்பாளர் ஞா. பிரான்சிஸ், துணைத்தலைவர் ச.நல்லபெருமாள், துணைச் செயலர் சோ.பன்னீர்செல்வம், விசிக இளஞ்சிறுத்தை பொறுப்பாளர் குடந்தை தமிழினி, பொதுக்குழு உறுப்பினர் மா.மணி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு, இலக்கிய அணி செயலாளர் பா. பொன்னுராசன், மாநகர அமைப்பாளர் ராஜகோபால், மாநகர துணைத்தலைவர் கவிஞர் எச். செய்க்முகமது இளைஞரணி தலைவர் இராஜேஷ், சேகர், தொழிலா ளரணி கருணாநிதி, மகேஷ், சியாமளா, பாலகிருஷ்ணன், ம.தமிழ்மதி, சந்தோஷ், குளச்சல் பெலிக்ஸ், ந.தமிழரசன், ச.ச.மணிமேகலை, ஆறுமுகம், ம.செல் வராசு, குமரிச் செல்வன், முத்துவைரவன், பி.கென்னடி, மாணவர்கள் அபிசா, தமிழரசி,கோகுல் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். பெரியாரியல் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விடுதலை, உண்மை சந்தா
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெரியார் - மார்க்ஸ் பற்றாளர் கழக ஆதரவாளர் ஜெகந் நாதன் (வயது 84)விடுதலை இதழுக்கும் உண்மை இதழுக்கும் ஆண்டு சந்தா வினை குமரி மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் வழங்கினார்
No comments:
Post a Comment