கிளாஸ்கோவில் நடைபெற்ற புவிமாசுக்குறைபாடு தொடர்பான மாநாட்டில் கரியமிலவாயுவின் பயன்பாட்டைக் குறைப்பது குறித்து அதிகம் பேசப்பட்டது, அதற்கான தீர்வுகளில் நிலக்கரி பயன்பாடு குறித்து மட்டுமல்லாமல் மனிதர்களின் நடத்தையில் கூட மாற்றம் குறித்து பேசப்பட்டது,
அதில் முக்கியமான ஒன்று வாரம் 4 நாள் வேலை - 3 நாள் ஓய்வு என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கருத்தாக்கம் ஆகும்.
முக்கியமாக மறு சுழற்சி குறித்து அதிகம் பேசப்பட்டது, அதாவது காகிதங்கள். ஆடைகள் போன்றவற்றை மறுசுழற்சி முறையில் உருவாக்கி பயன்படுத்த வேண்டும் என்றும் அதற்கான தொழில் நுட்பம் மேம்படவேண்டும் என்றும் இதன் மூலம் பருத்தி உள்ளிட்ட பயிர்களின் உற்பத்தியைக் குறைத்து அவ்வாறு குறையும் நிலப்பரப்பை வனங்களாக மாற்றும் சிந்தனையும் பேசப்
பட்டது,
இதில் மிகவும் முக்கியமானது வேலை நேரம் - அதாவது தற்போது 6 நாள் வேலைத் திட்டம் என்பதை வெறும் 4 நாள் வேலை என்று பேசப்பட்டது,
இதுதொடர்பாக பைனான்சியல் எக்ஸ்பிரஸ் இதழில் சைமன் கூப்பர் என்பவர் எழுதிய கட்டுரையில் நாம் வேலைசெய்யும் ஒவ்வொரு கூடுதல் மணிநேரமும் அதிகமான கரியமில வாயு உற்பத்தியாகிறது.
செல்வம் கூடக் கூட, பயணம் செய்வது, உட்கொள்ளும் பொருள்கள், உருவாக்கப்படும் பொருள்கள் எனக் கரியமில வாயு வெளியேற்றம் அதிகரிக்கின்றது.
வாரத்தில் 4 நாள்கள் மட்டும் வேலை செய்வதால், நமது தேவைகள் குறையும், ஓய்வு நேரம் அதிகரிக்கும் போது மனிதர்கள் புத்துணர்ச்சியோடு இருப்பார்கள். முக்கியமாக அன்றாட நடவடிக்கைகளில் மனிதர்கள் பரபரப்பாக இல்லாமல் தங்களின் வாழ்க்கையை அமைதியாகக் கழிக்க ஆரம்பிப்பார்கள்.
இதன் மூலம் மனித உடலில் இருந்து வெளியேறும் கரியமில வாயுக்களின் அளவு குறையத்துவங்கும், அதே நேரத்தில் அலுவலகங்கள் தொழிற்சாலைகள் நீண்ட நாள் மூடப்படுவதால் அவை வெளியிடும் கரியமிலவாயுவின் அளவும் பல மடங்கு குறைந்துவிடும். இதன் மூலம் புவி வெப்பமயமாதல் பெருமளவு குறைய வாய்ப்புள்ளது.
மனிதர்கள் தங்களுக்கு கிடைத்த கூடுதல் ஓய்வுநேரத்தை நடப்பது, விளையாடுவது போன்ற எளிமையான நடவடிக்கைகளில் செலவழிக்க மக்களை ஊக்குவிக்கவேண்டும். அப்போதுதான், வாரம் 4 நாள் வேலை பயனளிக்கும் என்றார் கூப்பர்.
No comments:
Post a Comment