நாய்கள், மனிதர்களின் சிறந்த நண்பர்கள் என்று கூறுவார்கள்.
அதை உண்மையாக்கும் விதமாக, இங்கிலாந்தைச் சேர்ந்த 71 வயது நபரின் உயிரை இரு நாய்கள் காப்பாற்றியுள்ளன .
கெஸ்விக் (Keswick) மலைப்பகுதியில் நடக்கச் சென்றவர், திடீரென சுயநினைவை இழந்தார். நல்ல வேளையாக, அப்போது அவருடன் அவர் வளர்த்துவரும் இரு நாய்களும் இருந்தன. ஒரு நாய் அவர் அருகில் நின்றுகொண்டது.
இன்னொரு நாய், மலையேறிக் கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு அருகில் சென்று குரைத்தது.
அந்தப் பெண் திரும்பிப்பார்த்தபோது, ஓர் ஆள் மயங்கிக்கிடப்பதைக் கண்டார்.
உடனடியாக அவர் அவசர எண்ணைத் தொடர்புகொண்டார். பின்னர் அந்த நபர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
அந்த இரு நாய்களைப் போல் நடந்துகொள்ள, பல நாய்களுக்குப் பல்லாண்டு பயிற்சி அளிக்கப்படுவதாக கெஸ்விக் மலை மீட்புக் குழுவின் ராப் கிரேஞ்ச் (Rob Grange) குறிப்பிட்டார்.
ஆனால் எந்தவொரு பயிற்சியுமின்றி இந்த நாய்கள் அவ்வாறு செயல்பட்டதை வியந்து பாராட்டினார் அவர்.
No comments:
Post a Comment