புதுடில்லி,நவ.3- நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 29 சட் டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் 3 மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 30.10.2021 அன்று நடைபெற்றது. இந்த இடைத் தேர்தலில் பதிவான வாக்கு கள் நேற்று (2.11.2021) எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.
அதன்படி, இமாச்சலப் பிர தேசத்தில் இடைத்தேர்தல் நடை பெற்ற 3 தொகுதி களிலும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசு அமோக வெற்றி பெற்றது. பாஜக ஆளும் மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் அனைத்து தொகுதி களையும் காங்கிரசு கைப்பற்றியது பாஜகவுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதில், ஃபதேஹ்பூர் மற்றும் அர்க்கி தொகுதிகளை காங்கிரசு இம்முறை மீண்டும் தக்க வைத்திருக்கிறது. ஜுபல் - கோதை தொகுதியை பாஜகவிடமிருந்து கைப்பற்றியுள்ளது.
பாஜக ஆளும் அசாம் மாநிலத் தில் தேர்தல் நடைபெற்ற கோசை கான், பபானிப்பூர், தாமுல்பூர், மரியனி, தவுரா ஆகிய 5 தொகுதி களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
மேற்குவங்கம்
மேற்கு வங்கத்தில் தேர்தல் நடந்த 4 தொகுதிகளையும் ஆளும் திரிணமூல் காங்கிரசு கைப்பற்றி இருக்கிறது. இதில், தின்ஹட்டா தொகுதியை பாஜகவிடமிருந்து அதிக வாக்கு வித்தியாசத்தில் திரிணமூல் காங்கிரசு கைப்பற்றி யுள்ளது. அங்கு போட்டியிட்ட திரிணமூல் வேட்பாளர் உதயன் குஹா, தன்னை எதிர்த்து களத்தில் நின்ற பாஜக வேட்பாளரை காட்டிலும் 1 லட்சத்து 60,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். மத்திய பிரதேசத்தில் இடைத் தேர்தல் நடைபெற்ற 3 தொகுதிகளை 2 தொகுதிகளில் ஆளும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ரய்கான் தனித் தொகுதியை காங்கிரசு கைப்பற்றியுள்ளது.
மேகாலயா
மேகாலயாவில் 3 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 2 தொகுதி களை ஆளும் தேசிய மக்கள் கட்சி (என்டிபி) கைப்பற்றியது. ஒரு தொகுதி யில் எதிர்க்கட்சியான அய்க்கிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றுள்ளது. மிசோராமில் தேர்தல் நடந்த ஒரு தொகுதியை ஆளும் மிசோ தேசிய முன்னணி கைப்பற்றியுள்ளது.
பீகார்
பீகாரை பொறுத்தவரை, தேர்தல் நடைபெற்ற இரண்டு தொகுதி களிலும் ஆளும் அய்க்கிய ஜனதா தளம் அமோக வெற்றி பெற்றிருக் கிறது.
பாஜக ஆளும் கருநாடகாவில் தேர்தல் நடந்த மொத்தம் 2 தொகுதி களில் ஓரிடத்தில் பாஜகவும், மற் றொரு இடத்தில் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளன.
ராஜஸ்தானில் இடைத்தேர்தல் நடைபெற்ற 2 தொகுதிகளை ஆளும் காங்கிரசு கைப்பற்றியுள்ளது.
மராட்டிய மாநிலத்தில் தேர்தல் நடந்த தெஹ்லூர் தொகுதியை காங்கிரசு கைப்பற்றியுள்ளது. அரியானாவில் தேர்தல் நடந்த ஒரு தொகுதியை எதிர்க்கட்சியான இந்திய தேசிய லோக் தளத்திடம் (அய்என்எல்டி) ஆளும் பாஜக இழந்துள்ளது. ஆந்திராவில் தேர்தல் நடந்த ஒரு தொகுதியில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரசும், டிஆர்எஸ் ஆளும் தெலங்கானாவில் தேர்தல் நடந்த ஒரு தொகுதியில் எதிர்க்கட்சியான பாஜகவும் கைப் பற்றியுள்ளன.
காங்கிரஸ் அமோக வெற்றி
பாஜக ஆளும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மாண்டி மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் எதிர்க்கட்சி யான காங்கிரசு அமோக வெற்றி பெற் றுள்ளது.
அதேபோல, மத்திய பிரதேசத்தின் காண்ட்வா மக்கள வைத் தொகுதியை ஆளும் பாஜகவும், தாத்ரா - நாகர் ஹவேலி தொகுதியை சிவசேனையும் கைப்பற்றியுள்ளன.
இடைத்தேர்தல் நடந்த 29 பேரவைத் தொகுதிகள் மற்றும் 3 மக்களவைத் தொகுதிகளை கைப் பற்றிய கட்சிகள் விவரம் வருமாறு:
பாஜக- 9, காங்கிரசு - 8, திரிணமூல் காங்கிரசு- 4, அய்க்கிய ஜனதா தளம் - 2, தேசிய மக்கள் கட்சி- 2, ஒய்எஸ்ஆர் காங்கிரசு - 1, இந்திய தேசிய லோக் தளம் -1, அய்க்கிய ஜனநாயகக் கட்சி- 1, மிசோ தேசிய முன்னணி- 1.
மக்களவைத் தொகுதிகள்: பாஜக, காங்கிரசு, சிவசேனை தலா- 1.
No comments:
Post a Comment