தமிழ்நாடு விவசாய சங்க பொதுச் செயலாளர் டாக்டர் வே.துரைமாணிக்கம் மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 3, 2021

தமிழ்நாடு விவசாய சங்க பொதுச் செயலாளர் டாக்டர் வே.துரைமாணிக்கம் மறைவு

தமிழ்நாடு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான  தோழர் டாக்டர் வே.துரைமாணிக்கம்  (வயது 76) அவர்கள் இன்று (2.11.2021) உடல் நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனைக்கும், துயரத்திற்கும் ஆளானோம்.

சிறந்த கொள்கையாளர் - பல போராட்டங்களை முன்னின்று நடத்திய களப் போராளி. எவரிடமும் பான்மையுடன் பழகும் பண்பாளர்; நம்மிடம் மிக்க பேரன்பு பூண்டவர்.

அவரது மறைவு அவரது குடும்பத்திற்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும் இழப்பல்ல; பொது வாழ்வு என்பது தூய்மையானது - எளிமையின் இருப்பிடம் என்னும் கருத்தியல் கொண்ட அவரது இழப்பானது அனைவருக்குமான மாபெரும் இழப்பு  ஆகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் தோழர்கள் அனைவருக்கும் நமது ஆறுத லையும், இரங்கலையும் உரித்தாக்குகிறோம்.


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

2-11-2021

குறிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை பாலன் இல்லத்தில் அவர் உடல் வைக்கப்பட்டிருந்தது. திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பெரியார் சமூகக் காப்பணியின் மாநில அமைப்பாளர் சோ.சுரேசு, க.கலைமணி உட்பட தோழர்கள் இறுதிமரியாதை செலுத்தினர்.


No comments:

Post a Comment