சென்னை,நவ.4- செங்கை மாவட் டம், ஊரப்பாக்கத்தில் ரூ.63.27 லட்சம் செலவில் கட்டப்பட்ட கிளைநூலக கட்டடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (3.11.2021) திறந்து வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக் கத்தில் நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டகிளை நூலகத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் இதைத் திறந்து வைத்தார்.
இதுகுறித்து மாவட்ட நூலக அலு வலர் மந்திரம் கூறியதாவது: ஊரப் பாக்கத்தில் 2003ஆம் ஆண்டு ஊர்ப்புற நூலகம் வாடகை கட்டடத்தில் தொடங் கப்பட்டது.
பின்னர் 2012ஆம் ஆண்டு கிளை நூலகமாக தரம் உயர்த்தப்பட்டது. வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த நூலகத்துக்கு சொந்த கட்டடம் கட்ட மாவட்ட நிர்வாகம் 5 சென்ட் நிலத்தை ஊரப்பாக்கத்தில் ஒதுக்கீடு செய்தது. இதை அடுத்து ரூ.63 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பில் 1,320 சதுர அடி பரப்பளவில் 2 மாடிக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த நவீன நூலக கட்டடத்தை தலைமைச் செயலகத்திலிருந்து முதல மைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த நூலகத்தில் 1,693 உறுப்பினர் களும் 32 புரவலர்களும் உள்ளனர். 13 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. இன்னும் 5 ஆயிரம் புத்தகங்கள் வழங்கப் பட வுள்ளன. நூலகத் துக்கு தினமும் 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வரு கின்றனர்.
ஏற் கெனவே வாடகை கட்டடத்தில் இட பற்றாக்குறையுடன் இயங்கி வந்ததால் மக்கள் வருகை குறைவாக இருந்தது. தற்போது நவீன வசதிகளுடன் புதிய நூலகம் கட்டப்பட்டுள்ளதால் பொது மக்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்.
No comments:
Post a Comment