முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை,நவ.4- பள்ளிக்கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள ரூ.169.11 கோடி மதிப்பிலான கட்ட டங்களை திறந்து வைத்த முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், 3 கற்போர் மய்யங்களுக்கு மாநில எழுத்தறிவு விருதுகளையும் வழங்கினார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று (3.11.2021) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நபார்டு திட்டத்தின் கீழ் கோவை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், திருவள்ளூர், திருவண் ணாமலை, திருச்சி, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் அமைந்துள்ள 65 அரசு உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் ரூ.114 கோடியே 88 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் வகுப்பறை, ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர், கழிப்பறை வசதிகள், சுற்றுச்சுவர்கள் அமைக்கப் பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த கல்வித்திட்டத் தின் கீழ் அரியலூர், பெரம்பலூர், திருப்பூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, நாகப்பட்டினம் மாவட் டங்களில் அமைந்துள்ள 45 அரசு உயர்நிலை, மேல்நிலை, 9 உண்டு உறைவிடப் பள்ளிகளில் ரூ.49 கோடியே 29 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பில் வகுப்பறைகள், ஆய்வகம் உள்ளிட்டவை அமைக்கப்பட் டுள்ளன.
சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து சிவகங்கையில் செம்பனூர் மெய்யம்மை காசி அரசு மேல் நிலைப்பள்ளியில் ரூ.80 லட்சத்தில் 4 வகுப்பறைகள் கொண்ட கட்ட டம், மாவட்ட கனிமவள நிதியில் இருந்து திருப்பூர், புக்கலம் அரசு உயர்நிலைப் பள்ளிக்குரூ.55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 3 வகுப்பறைக் கட்டடங்கள், காஞ்சிபுரம் மாவட்டம், ஊரப்பாக்கத்தில் ரூ.63.27 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கிளை நூலகம், மதுரைஅவனியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத் தில் ஆசிரியர்நல நிதியில் இருந்து ரூ.3 கோடி மதிப்பில் ஆசிரியர் இல்லக்கட்டடம் ஆகியவை கட்டப் பட்டுள்ளன. மொத்தம் ரூ.169 கோடியே 11 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்ட டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், 2021-2022ஆம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கையில், பள்ளி சாராமற்றும் வயது வந்தோர் கல்விஇயக்கத்தின் வாயிலாக செயல் படுத்தப்படும் ‘கற்போம் எழுது வோம்’ இயக்கத்தின் கீழ் திட்டச் செயல்பாடுகளைச் சிறப் பாகவும் புதுமையாகவம் செயல்படுத்திய கற்போர் மய்யங்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்டத்துக்கு தலா 3 மய்யங்கள் வீதம் 38 மாவட்டங்களில் 114 மய்யங்கள் தேர்வு செய்யப்பட்டு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை, திருவள் ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட் டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 3 கற்போர் மய்யங் களுக்கு மாநில எழுத்தறிவு விருது களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய் யாமொழி, செயலர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வி ஆணையர் க.நந்த குமார், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் பெ.குப்பு சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment