பா.ஜ.க.வின் வீழ்ச்சியில்தான் - 'நீட்' ஒழிப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 29, 2021

பா.ஜ.க.வின் வீழ்ச்சியில்தான் - 'நீட்' ஒழிப்பு!

மருத்துவ மாணவர் சேர்க்கையில் 'நீட்' தேர்வு முறையானது - ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதா என்பது குறித்தும், அவ்வாறு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை களையும் வகையில் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய நியாயமான மாணவர் சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்துவது குறித்தும் ஆராய்ந்து, தக்க பரிந்துரைகளை அளித்திட நீதிபதி .கே ராஜன் தலைமையில் குழு ஒன்றை சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் அமைத்தார்.

இக்குழுவானது நீட் தேர்வு பற்றி பல்வேறு தரப்பினரின் கருத்துக் களைக் கேட்டறிந்தும், மாணவர் சேர்க்கை பற்றிய தகவல்களைத் தீர ஆராய்ந்தும், சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாண வர்களுக்கு 'நீட்' தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கி, இந்த பாதிப்புகளை அகற்றிட மாற்று மாணவர் சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்துவது குறித்தும் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது. இந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் 13.9.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்ட முன்வடிவு' நிறைவேற்றப்பட்டது. இச்சட்ட முன்வடிவிற்கு குடியரசுத் தலை வரின் ஒப்புதல் பெற ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் தனித்தன்மையை கருத்தில் கொண்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை விரைவில் பெறும் பொருட்டு ,தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஆளுநரை தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த சனியன்று சந்தித்து வலியுறுத்தினார்.

ஆளுநர் என்பவர் ஒன்றிய அரசு சுழற்றும் கயிறுக்கு ஏற்ப ஆடும் பம்பரம்தானே! புரோகித் இருந்தாலும் சரி, ரவி வந்தாலும் சரி - செயல்பாடு ஒன்றே!

அகில இந்திய அளவில் - சிம்லாவில் நடைபெற்ற பேரவைத் தலைவர்கள் மாநாட்டில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மாண்புமிகு அப்பாவு சொன்ன கருத்து முக்கியமானது.

'நீட்' எதிர்ப்பில் தமிழ்நாடு நடந்து வந்த பாதை நினைவூட்டத் தக்கதாகும்.

மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நாடு தழுவிய அளவில் தேர்வு ஒன்றை நடத்துவதற்கான சட்டம் 2016இல் நிறை வேற்றப்பட்டது. அந்த ஆண்டு மட்டும் தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப்பட்டது.

இந்தச் சட்டத்தை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்த நிலையில்,   'நீட்' தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு முழு விதிவிலக்கு வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டு மசோதாக்கள் ஏகமனதாக (01.02.2017)  நிறைவேற்றப்பட்டன. இந்த இரண்டு மசோதாக்களும் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன

இந்தச் சட்டம் தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகையிலி ருந்து பதில் ஏதும் வராத நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கராஜன் (சி.பி.எம்.) குடியரசுத் தலைவர் மாளிகைக்கு இது தொடர் பாக கடிதம் ஒன்றை எழுதினார். அதற்கு பதிலளித்த குடியரசுத் தலைவர் மாளிகை, அப்படி சட்டம் ஏதும் தங்களிடம் நிறுத்தி வைக்கப்படவில்லையெனக் கூறியது.

இந்த 'நீட்' தொடர்பான இரு மசோதாக்களை 19 மாதங்களுக்கு முன்பாகவே ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியிருக்கிறது. இது தொடர்பாக 2017 செப்டம்பர் மாதம் 22ஆம் தேதியே ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு கடிதமும் அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தில், தமிழ்நாடு அரசின் இரண்டு மசோதாக் களுக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தரவில்லை என்பதை ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது. 

அதாவது  தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தை ஒரு பொருட்டாகவே கருதாமல் மசோதாக்களைத் திருப்பி அனுப்பிவிட்டது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் 2019- ஜூலை ஆறாம் தேதியன்று பதிலளித்த ஒன்றிய உள்துறை அமைச்சகம், இந்த இரு சட்டங்களுக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லையென பதில் அளித்தது.

இந்த விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்த நிலையில், குடியரசுத் தலைவர் 2017ஆம் ஆண்டிலேயே இந்தச் சட்டங்களை நிராகரித்து திருப்பி அனுப்பிய கடிதம் வெளியாகியது.   அதை தமிழ்நாட்டின் முந்தைய .தி.மு.. அரசு மக்களிடமிருந்து 19 மாதங்கள் மறைத்து வைத்துவிட்டது.

...தி.மு.. அரசு ஒன்றிய பிஜேபி அரசுக்கு எல்லா வகையிலும் அடிமைப்பட்டுக் கிடந்த நிலையில் இவ்வாறு நடந்து கொண்டதில் வியப்பு இல்லை.

ஒன்றிய அரசு என்பது ஏதோ ஜமீன்தார் போலவும் மாநில அரசு என்பது, அதற்குக் குற்றேவல் புரியும் அடிமை என்பதும் போன்ற ஒரு நிலை இருந்து வருவது - ஜனநாயகப் போர்வையில் மான்களை வேட்டையாடும் கடும்புலியின் பாய்ச்சலுக்கு ஒப்பானதாகும்.

'நீட்'டை விரும்பாத மாநிலத்துக்கு விதி விலக்கு அளிக் கலாம் என்று நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்தும் அதற்கு ஒன்றிய பா... அரசு செவி மடுக்கவில்லை; அலட்சியப்படுத்துகிறது.

ஆம். ஒன்றிய அரசு ஆர்.எஸ்.எஸின் கைப்பாவை, ஆர்.எஸ்.எஸ். என்பதோ ஆரிய ஆதிக்கத்திற்கான அடிப்படை நோக் கத்தைக் கொண்டது. எனவே தான் சமூக அநீதி தலை விரித் தாடுகிறது.

பெரும்பான்மை மக்களுக்கு எதிரான கொள்கையையும், நோக்கத்தையும் கொண்ட ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் அரசியல் அடையாளமான பா...வை ஆணி வேருடன் வீழ்த்துவதே இதற்கு ஒரே தீர்வு!

தமிழ்நாடு சட்டப் பேரவை இரண்டாவது முறையும் நிறைவேற்றிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லையானால், அது பச்சையான ஜனநாயகப் படுகொலையே!

வெடிக்கட்டும் வெகு மக்கள் புரட்சி!

No comments:

Post a Comment