குடிநீர் பிரச்சினையா? சிவகங்கை அருகே 2 ஆண்டுகளில் சிறுநீரக பாதிப்பின் காரணமாக 20 பேர் உயிரிழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 29, 2021

குடிநீர் பிரச்சினையா? சிவகங்கை அருகே 2 ஆண்டுகளில் சிறுநீரக பாதிப்பின் காரணமாக 20 பேர் உயிரிழப்பு

 சிவகங்கை,நவ.29- சிவகங்கை அருகே கீழப்பூங்குடி ஊராட்சி வீரப் பட்டியில் 350 குடும்பங்கள் வசிக் கின்றன. இவர்கள் விவசாயிகளாக வும், கூலித்தொழிலாளர்களாகவும் உள்ளனர். இக்கிராமத்துக்கு அருகே உள்ள கண்மாயில் ஆழ்துளைக் கிணறு அமைத்து குடிநீர் விநியோ கிக்கப்படுகிறது. அந்நீர் உவர்ப்பாக உள்ளது. இந்நிலையில் அக்கிரா மத்தில் கடந்த 5 ஆண்டுகளில்

40-க்கும் மேற்பட்டோர் சிறுநீரக பாதிப்பால் இறந்துள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 20-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ள னர். மேலும் சிலருக்கும் சிறுநீரகம் பாதித்து சிகிச்சை பெற்று வருகின் றனர். சிலருக்கு சிறுநீரகக் கல் பிரச்சினையும் உள்ளது. இதற்கு தீர்வு கிடைக்காமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கூறுகையில், ‘எங்கள் கிராமத்தில் சிறுநீரக பாதிப்பால் சிறுவயதிலேயே பலர் இறந்து விட்டனர். சமீபத்தில் சகோதரர் களான மகேஷ் (37), சுப்ரமணி (32) ஆகியோர் இறந்தனர். பெரும் பாலும் ஆண்கள்தான் இறக்கின்ற னர். இதனால் நாங்கள் அச்சத்தில் உள்ளோம். சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் கிராமத்தில் மண், தண்ணீரை அதிகாரிகள் ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். அதன்பிறகு எந்தவித நடவடிக்கையும் இல்லை. மருத்துவர்களும் நாங்கள் குடிக்கும் தண்ணீர் தான் பிரச்சினை என்கின் றனர். குடிநீரை சுத்திகரித்து விநி யோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதுகுறித்து சிவகங்கை மருத்துவக் கல்லூரி டீன் ரேவதிபாலன் கூறுகையில், ‘சிவ கங்கை பகுதியில் சிறுநீரக பாதிப்பு அதிகம் உள்ளது. அது குறித்து ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளோம்என்றார்.

 

20 ஆண்டுக்கு பிறகு நிரம்பிய உப்பாறு அணை



திருப்பூர்,நவ.29- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ளது உப்பாறு அணை. திருமூர்த்தி அணையின் உபரி நீரை இங்கு சேமிக்கும் வகையில் அணை கட்டப் பட்டது. பல ஆண்டுகளுக்கு முன் னர் உபரி நீரால் பயன்பெற்று வந்த உப்பாறு அணைக்கு, பிஏபி திட்ட பாசன விரிவாக்கம் நடந்த பிறகு, உபரி நீரின் அளவு குறைந்தது.

அதோடு, அணைக்கு மழைநீர் வரும் ஓடையில் பல இடங்களில் ஊராட்சி நிர்வாகங்களால் தடுப் பணைகள் கட்டப்பட்டதால் அணைக்கு வரக்கூடிய மழைநீரும் வராமல் போய்விட்டது. அணையின் நீராதாரங்கள் அழிக்கப்பட்டதால் உப்பாறு அணையால் பயனடைந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த 17ஆம் தேதி உப்பாறு அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் 7 மணி நேரத் துக்கும் மேல் கனமழை பெய்தது. இதனால் நீர்வரத்து அதிகரித்து 27.11.2021 அன்று இரவு அணையின் மொத்த உயரமான 24 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்தது. இதனை யடுத்து, 20 ஆண்டுகளுக்குப் பிறகு உப்பாறு அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு உப்பாறு ஓடையில் சென்றது. அணையில் உபரி நீர் திறப்பதைக் காண சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் விசில் அடித்தும், பட் டாசு வெடித்தும் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறிய தாவது: கடந்த 20 ஆண்டுகளில் உப் பாறு அணை 13 அடியை தாண்டிய தில்லை. இதனால் தாராபுரம் தாலு காவில் உள்ள கெத்தல்ரேவ், நஞ்சியம்பாளையம், தும்பலப்பட்டி, வேலம்பாளையம் உள்ளிட்ட

10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளிலும் நீலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத் துக்கு சென்று குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

கடந்த ஒரு வாரமாக பிஏபி அரசூர் கதவணை வழியாக உப் பாறு அணைக்கு 200 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், உப்பாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குண்டடம், வாகைத் தொழுவு, கேத்தனூர் உள்ளிட்ட பகு திகளில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக அணைக்கு கடந்த வாரத்தில் 1200 கனஅடி நீர்வரத்து ஏற்பட்டு நீர்மட்டம் முழு உயரத்தை எட்டியது. இதனால் சுற்றுவட்டாரங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்றனர்.

No comments:

Post a Comment