சென்னை, நவ.29 தமிழ்நாட்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. 12ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாம் நேற்று (28.11.2021) தமிழ்நாடு முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மய்யங்கள், சத்துணவு மய்யங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் என மொத் தம் 50,000 இடங்களில் நடைபெற்றது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் மெகா கரோனா தடுப்பூசி முகாம் செயல்பட்டது.
தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகா தாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். காலை 7 மணி முதல் இரவு வரை நடைபெற்ற முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசிகளை போட் டுக் கொண்டனர். குறிப்பிட்ட கால அவகாசம் முடிந்தும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வர்களுக்கு முன்னுரிமை அளித்து முகா மில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அடையாறில் 12ஆவது மெகா தடுப் பூசி முகாம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி ஆகி யோர் துவங்கி வைத்தனர்.
அதன்படி நேற்று (28.11.2021) நடை பெற்ற 12ஆம் கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாமில் 16,05,293 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் முதல் தவணையாக 5,89,140 பேருக்கும், இரண்டாவது தவணையாக 10,16,153 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. அதனால், இன்று தடுப்பூசி மய்யங்கள் செயல்படாது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதைப்போன்று சென்னை மாநக ராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் 1600 முகாம்களுடன் 12 ஆவது கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
No comments:
Post a Comment