சமையல் எரிவாயு உருளை வாங்க டிசம்பர் முதல் புதிய மாற்றங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 30, 2021

சமையல் எரிவாயு உருளை வாங்க டிசம்பர் முதல் புதிய மாற்றங்கள்

புதுடில்லி, நவ. 30- சமையல் எரிவாயு உருளை விலை உள்ளிட்ட பல் வேறு பணம் சார்ந்த விடயங்கள் டிசம்பர் 1ஆம் தேதி முதல் மாற விருக்கின்றன.

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் எரிவாயு உருளை விலை மாற்றம் செய்யப்படுகிறது. சில மாதங்களில் இரண்டு முறை கூட விலை மாற்றம் செய்யப்படு கிறது. கரோனா பிரச்சினைக்குப் பிறகு சமையல் எரிவாயு உருளை விலையும் உயர்ந்திருப்பதால் டிசம் பர் 1ஆம் தேதி எரிவாயு உருளை விலை குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப் பில் பொதுமக்கள் இருக்கின்றனர்.

மேலும் சில

விழா கால சமயத்தில் பல்வேறு வங்கிகள் சிறப்புக் கடன் சலுகைகளை அறிவித்திருந்தன. அந்த சலுகைகள் டிசம்பர் மாதத்தில் முடிவடை கின்றன. எல்.அய்.சி. ஹவுசிங் ஃபை னான்ஸ் நிறுவனம் அறிவித்த சலுகை மட்டும் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிகிறது. மற்ற வங்கிகளின் சலு கைகள் டிசம்பர் 31 வரை உள்ளன. எனவே வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களைப் பெறுவோர் சலுகை கள் உள்ள னவா என முன்கூட்டியே பார்த்து கடன் பெறலாம்.

எஸ்பிஅய் கிரெடிட் கார்டு வைத்திருப்போர் கவனத்துக்கு... இந்த கார்டு மூலமாக இணையவழி பொருட்கள் வாங்க இனி அதிகம் செலவிட வேண்டியிருக்கும். டிசம் பர் 1 முதல் முதல் எஸ்பிஅய் கிரெடிட் கார்டு ஈஎம்அய்களுக்கு செயல்பாட்டுக் கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படும். தற் போது வட்டி மட்டுமே வசூலிக் கப்படுகிறது.

ஆதார் கார்டை பிஎஃப் கணக் குடன் இணைப்பது கட்டாயமாக் கப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் நவம்பர் 30ஆம் தேதியு டன் முடிவடைகிறது. கால அவ காசம் முடிவதற்குள் ஆதாரை இணைக்காமல் இருந்தால் பிஎஃப் பணம் கிடைப்பதில் பாதிப்பு ஏற் படலாம்.

ஓய்வூதியம் வாங்குவோர் தாங் கள் உயிரோடுதான் இருக்கிறோம் என்பதைத் தெரிவிக்க ஒவ்வொரு ஆண்டும் ஆயுள் சான்றிதழ் சமர்ப் பிப்பது அவசியமாகும். அதற்கான கால அவகாசம் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க நிறைய வசதிகளும் ஏற்படுத்தப் பட்டுள்ளன. கால அவகாசத்துக் குள் சமர்ப்பிக்காமல் இருந்தால் ஓய்வூதியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

No comments:

Post a Comment