காபூல், நவ. 30- ஆப்கானிஸ் தானில் இருந்து அமெ ரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து தலிபான் கள் ஆட்சியை கைப்பற்றி னர்.
அப்போது, கடந்த காலங்கள் போல் நாங்கள் செயல்பட மாட்டோம் என்றும் மக்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளும் வழங்கப் படும் என்றும் தலிபான் அமைப்பு கூறியது.
ஆனால், அதற்கு நேர் மாறாக ஆப்கானிஸ்தா னில் நடைபெற்று வருகி றது. பெண்களுக்கு எதி ரான வன்முறையும், அடுத் தடுத்த தடை அறிவிப்பு களையும், அதிர்ச்சி நட வடிக்கைகளையும் எடுத்து வருகின்றது.
இதற்கு அண்டை நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை வைத்திருக்க விரும்புவதாக ஆப்கா னிஸ்தான் தற்காலிக பிரதமர் முல்லா ஹசன் அகுண்ட் கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:-
இஸ்லாமிய எமிரேட் அனைத்து நாடுகளுட னும் நல்லுறவு, பொருளா தார உறவு மற்றும் சக வாழ்க்கை கொண்டிருக்க விரும்புகிறது. ஆப்கா னிஸ்தான் எந்த நாட்டின் உள்விவகாரங்களிலும் தலையிடாது. அது எங் கள் கொள்கை அல்ல.
ஆப்கானிஸ்தானில் இருந்து எந்த நாட்டிற்கும் எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை. ஆப்கானிஸ்தா னில் இருந்து யாரும் பாதிக்கப்பட மாட்டார் கள். எங்கள் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பு வதில் கவனம் செலுத்துகி றோம். ஆப்கானிஸ்தான் மீது அழுத்தம் கொடுப் பது யாருக்கும் பயனளிக் காது. இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment