லண்டன், நவ. 30- தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட் டுள்ள ஒமிக்ரான் கரோனா வைரஸ் அய்ரோப்பிய நாடுகளில் கால் பதிக்கத் தொடங்கியுள்ளது. இங் கிலாந்திலும் இருவருக்கு ஒமிக்ரான் கரோனா வைரஸ் பாதிப்பு கண்ட றியப்பட்டுள்ளது. ஒமிக் ரான் கரோனா தடுப்பூசி செலுத்தியவர்களையும் பாதிக்க வாய்ப்பு உள்ள தாக சொல்லப்படுவதால் உலக நாடுகள் தடுப்பு நட வடிக்கைகளை துரிதப் படுத்தி வருகின்றன.
அந்த வகையில், இங் கிலாந்தில் கடைகள் மற் றும் பொது போக்குவ ரத்தை பயன்படுத்துவர் கள் முகக்கவசம் அணி வது கட்டாயம் ஆக்கப் பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை முதல் புதிய உத்தரவு அமலுக்கு என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணி களுக்கும் கட்டாயமாக பிசிஆர் பரிசோதனை செய் யப்படும் நடைமுறையை விரைவில் துவங்கும் என சுகதாரத்துறை அமைச் சர் சாஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.
புதிய ஒமிக்ரான் கரோனா எவ்வாறு செய லாற்றும் என்பதை ஆய்வு செய்ய மருத்துவ விஞ்ஞானிகளுக்கு கூடுதல் அவகாசம் அளிக்கும் வகையிலேயே புதிய கட் டுப்பாடுகள் அமல்படுத் தப் படுவதாகவும் இந்த கட்டுப்பாடுகள் விரை வில் தளர்த்தப்படும் என வும் சாஜித் ஜாவித் நம் பிக்கை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment