சென்னை, நவ.5 விவசாயிகளின் அறுவடை மற்றும் வேளாண் சார்ந்த பணிகளுக்கான கருவிகள் தயாரிப்பிலும் முழுக்கவனம் செலுத்தி வரும் சோனாலிகா நிறுவனம் டிராக்டர்கள் ஏற்றுமதியிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்நிறுவனம் விவசாயிகள் சார்ந்த பணிகளுக்காக, அவர்களது தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலான டிராக்டர்கள் உள்ளிட்டவற்றை அதிகம் கிடைக்கும் வகையில் கவனம் செலுத்தியுள்ளது.
இதன் விளைவாக இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை நடப்பு நிதி ஆண்டின் (2021-2022) முதல் ஏழு மாதங்களில் 85,068 டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 6.56% வளர்ச்சி யாகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் 79,829 டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டது.
நம் நாட்டில் விவசாயிகள் தொடர்ந்து தொழில்நுட்பங்களை விவசாயத்தில் பயன்படுத்துவது அதிகரித்துவரும் சூழலில் சோனாலிகா நிறுவனம் அக்டோபர் மாதத்தில் மட்டும் 17,130 டிராக்டர்களை விற்பனை செய்து 5.5% வளர்ச்சியை எட்டியதோடு இத்துறை வளர்ச்சியைவிட (எதிர்பார்க்கப்படுவது: 3.6%) கூடுதல் வளர்ச்சியை எட்டியுள்ளது என இந்நிறுவன செயல் இயக்குநர் ரமன் மிட்டல் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment