சென்னை,நவ.4- தமிழ்நாட்டில் அதிக மரக்கன்றுகளை நடுதல், தோட்டங்களை அமைத்ததில், இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளை உலக சாதனை படைத்துள்ளது.
இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளை, ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மூலம் ‘பசுமை பயணம்’ இயக்கத்தை நடத்தி தமிழ்நாடு முழுவதும் 1.70 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளது. 15 ஆயிரத்துக்கும் அதிகமான தோட்டங்கள் மற்றும் மாடி தோட்டங்களை அமைத்து உலக வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அதிக அளவில் மரங்களை நட்டது, தோட்டங்கள் மற்றும் மாடித் தோட்டங்களை அமைத்ததில் உலகின் முதல் மருத்துவ சங்கம் எனும் உலக சாதனையை 2012ஆம் ஆண்டில் படைத்துள்ளது. இந்த சாதனை ‘யுனி வர்சல் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரிக்கார்ட்ஸ்’ மற்றும் ‘ஃப்யூச்சர் கலாம் புக் ஆஃப் ரிக்கார்ட்ஸ்’ ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளன.
No comments:
Post a Comment