ரோபோ எந்திரம் மூலம் உணவு வினியோகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 4, 2021

ரோபோ எந்திரம் மூலம் உணவு வினியோகம்

ஆன் அர்பார், நவ. 4-  கரோனா வைரஸ்பரவலை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடான பிரிட்டனில், உணவு வினியோக நிறு வனங்கள், 'ரோபோ'க் களை அதிகம் பயன்படுத்த துவங்கியுள்ளன. இதனால், ரோபோக்களுக்கு தேவை அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் பல முக்கிய நகரங்களிலும், பிரிட்டன் உள்ளிட்ட அய்ரோப்பிய நாடுகளி லும், உணவு வினியோக நிறுவனங்கள், மனிதர்க ளுக்கு பதிலாக ரோபோக் களை பயன்படுத்தி வரு கின்றன. கரோனா பரவ லுக்குப் பின் வேலையாட் களுக்கான தேவை அதிக ரித்துள்ளது. உணவு வினி யோக துறையில் ஈடுபட் டுள்ள நிறுவனங்கள், போதிய ஆட்கள் கிடைக் காமல் திணறுகின்றன. இதையடுத்து ரோபோக் களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

'ஸ்டார்ஷிப் டெக்னா லஜிஸ்' என்ற அமெரிக்க உணவு வினியோக நிறுவ னம், சமீபத்தில் 20 லட்சம் வினியோக சாதனையை படைத்துள்ளது.கடந்த 2019ஆம் ஆண்டில் 250 ரோபோக்களை, உணவு வினியோகத்தில் இந்த நிறுவனம் ஈடுபடுத்தியது. தற்போது அந்த நிறு வனத்திடம் மட்டும் 1,000 ரோபோக்கள் உள்ளன.கல்லூரிகள், மால்கள் போன்ற இடங்களில் வினியோகத்துக்கு இந்த ரோபோக்கள் பயன்படுத் தப்படுகின்றன. ரோபோக் கள் பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் இருந்தா லும், அதிக வாடிக்கையா ளர்கள் ரோபோக்கள் மூலமான உணவு வினி யோகத்தை தேர்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment