கராகஸ், நவ. 4- பன்னாட் டளவில் மிகவும் குறைந்த விலையாக வெனிசுலா நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 1.48 க்கு (இந்திய மதிப்பில்) விற் கப்படுகிறது.
அதிகபட்சமாக ஹாங்காங்கில் 1 லிட்டர் பெட்ரோல் விலை சுமார் ரூ.200 க்கு விற்கப்படுகிறது. நெதர்லாந்தில் ரூ. 172 ஆக வும், நார்வேயில் ரூ.170 ஆகவும், டென்மார்க்கில் ரூ.162 ஆகவும் விற்பனை யாகிறது.
ஆசிய அளவில் பார்த் தால், இந்தியாவுக்கு அடுத்தபடியாக ஜப்பானில் ரூ. 93 ஆகவும், சீனாவில் ரூ. 84 ஆகவும், வங்கதேசத்தில் ரூ. 77 ஆகவும், இந்தோனேசியா வில் ரூ. 60 ஆகவும், இலங் கையில் ரூ. 68 ஆகவும், பாகிஸ்தானில் ரூ. 59 ஆகவும், மலேசியாவில் ரூ. 37 ஆகவும் உள்ளது.
ஈரானில் 5 ரூபாய்க்கும் சிரியாவில் 17 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. மேலும் 21 நாடுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.50 க்கும் கீழே உள்ளது.
கச்சா எண்ணெய் உற் பத்தி செய்யும் நாடுகளில் எப்போதும் பெட்ரோ லிய பொருட்கள் குறை வாகவே இருந்து வருகி றது.
இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்யும் முக்கிய நாடாக உள்ளது. ஆனால் ஒன்றிய அரசின் அதிக வரி விதிப்பே பெட் ரோல் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment